எனக்கு English எல்லாம் பாடசாலை காலத்திலிருந்தே கொஞ்சம் அப்படி இப்படித்தான். எப்படியாவது borderல pass mark எடுத்திடுவன். O/L, A/L exam க்கு எப்படியோ credit எடுத்துவிட்டேன். A/L க்கு பிறகு Degree படிக்க போனேன் முழுக்க முழுக்க Englishதான். பிறகு எப்படியோ எனக்கு பழகிவிட்டது.
Facebook எனக்கு அறிமுகமாகியது 2007ல் தான். அது வந்த பிறகுதான் நிறைய விசயம் எனக்கு English ல தெரியவந்தது.
Facebookல் அந்த நேரம் வந்த அநேகமான apps எல்லாவற்றையும் install செய்திருக்கிறேன். அதிலொன்றில் (apps பெயர் ஞாபகமில்லை) நாங்கள் அருமை பெருமையாக செய்தவற்றை எங்கள் விருப்பங்களை, கேள்விகளாக கேட்கும். அதில் 2 options தான் விடைகளாக வரும் அதையே நாங்கள் தொிவு செய்ய வேண்டும்.
உதாரணமாக:-
1. What is your favorite brand - Pepsi | Coke
2. Have You Ever Stolen Something from any shop? - Yes | No
இந்த ஒரு தொகை கேள்விகளில் எங்களுக்கு விருப்பமில்லாதவற்றை தவிர்க்கலாம்.
இப்படிக் கேட்டுக்கொண்டு வரும் போது ஒரு கேள்வி வந்தது.
Have you ever had a one night stand?
நான் assignments செய்வதற்காக இரவிரவாக நித்திரை முழித்து செய்து கொண்டிருந்த நேரங்கள், முழு இரவும் முழித்திருந்த காலமும் உண்டு. அதனால் இந்த கேள்வி வந்ததும் “அட இரவு முழுக்க கொட்டகொட்ட முழிச்சிருந்தியா என்று வேற கேட்கிறானே” என்று யோசித்து Yes என்று பதில் போட்டுவிட்டு public ல post செய்து விட்டேன்.
பிறகு அடுத்த நாள் சும்மா பார்த்துகொண்டு போகும் போதுதான் எனக்கு உறைத்தது இது வேற எதையோ கேட்கிற மாதிரி இருக்கே என்று. dating மாதிாி ஏதோ போல என்று அக்கேள்வியை அழித்து விட்டேன். (அதுக்குள்ள எத்தனை பேர் பார்த்து முகஞ்சுழ்ச்சாங்களோ தெரியல.) அந்த நேரம் google ல search பண்ணவேயில்ல - நம்பினால் நம்புங்க - இப்ப இத எழுதுவதற்காக தான் search பண்ணி பார்த்தன்.
இதே மாதிரிதான் Google chat ல ஒரு இரவு நேரம் நான் நண்பியுடன் chat பண்ணிக்கொண்டிருந்தன். அதே நேரம் அவள் தெலைபேசியில் கதைத்தாள். chat ல் என் முழு விபரங்களும் கேட்கப்பட்டுக்கொண்டு இருந்தது. எப்பவுமே முசுப்பாத்தியாக கதைப்பதால் கேட்ட கேள்விகள் எல்லாத்துக்கும் royal family range ல தான் பதில் போட்டுக்கொண்டு இருந்தன். ஆனாலும் சின்ன யோசனை
தெலைபேசியில் கதைக்கும் போது chat பண்றத பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று, ஆனாலும் chat தொடர்ந்தது. (எல்லாம் english தான், நாங்கதான் அதி மேதாவிகளே!!)
அப்போதான் அப்பா பக்கத்தில இருந்து பார்த்தார்.
யாரோட chat நடக்குது என்று கேட்டார்
நான் என் நண்பி பெயரை சொன்னன்
அப்போ அப்பா சொன்னார் என்ன இப்படி எல்லாம் chat பண்ணுறாய் என்ன இருக்கு என்று பார்த்தா reply போடுகிறாய் என்று கேட்டார்
நான் சொன்னன், இல்ல அவ போட்டா நானும் reply போடுறேன் என்று.
அதெல்லாம் கூடாத சொல்லுகள் பாவிபட்டுக்கொண்டிருக்கு என்றார். (சத்தியமா எனக்கு அது தெரியாது)
உடனேயே நான் திரும்ப தெலைபேசியில் கேட்டேன், நீ இப்ப என்னோட chat பண்ணிக்கொண்டு இருக்கிறாயா என்று. அவள் உடனே இல்லையே என்றாள். சும்மா விளையாட்டுக்கும் பொய் சொல்வதால் முதலில் நம்பவில்லை பிறகு chat history எல்லாம் அனுப்பினேன்.
அதுக்கு பிறகு தான் விளங்கிச்சு, அவள் office email id ஐ logout செய்யாமல் வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவள் பாவிக்கும் கணணி அவளுக்கென்றே பிரத்தியோகமானது இல்லை, அதனால் office ல் இரவு நேரம் வேலை செய்த யாரோ தான் விளையாட்டு காட்டியிருக்குது.
அடுத்த நாள் முதல் வேலையாக Boss இடம் சொல்லி பிறகு office email id யில் உள்ள email address எல்லாவற்றையும் delete பண்ணிவிட்டாள். நல்லவேளை அந்த எருமை மாடு அதுக்கு பிறகு ஒரு சேட்டைக்கும் வரவில்லை.
அப்பா அப்பவே கேட்டார் நான் போய் Office கண்ணாடியை உடைக்கவா என்று.. ஒரு வேளை அந்த எருமை மாடு திரும்ப வந்திருந்தால் ???????????? நான் பொறுப்பில்லை.. ஹிஹிஹிஹி..
இப்பவெல்லாம் கூகிளாண்டவர் துணையுடன் தான் வலம் வருகின்றேன்.