Unordered List

valaipookkal.com Tamil Blogs

Saturday, October 19, 2013

எலி பிடிக்க வாறீகளா???

அது ஒரு இரவு நேரம் ஆகிக்கொண்டு இருந்தது. வீட்டில் மெகாசீரியலுடன் முழ்கியிருந்த நேரம். அந்த நேரம் ஒருத்தர் யன்னலால வந்தார். இவ்வளவு நாளும் நித்திரை கொண்டபிறகு வாரவர் இப்ப இந்த நேரம் வந்திட்டார் (ஒருவேளை அவருடைய மணிக்கூடு முந்தி ஓடிட்டோ?)

 அவரைக் கண்டவுடனேயே அறைக்கதவுகள் எல்லாவற்றையும் மூடியாச்சு. ஒரு மாதிரி அடுப்படியில் இருந்து வரவேற்பறை வரைக்கும் கலைச்சாச்சு. அதற்குள் கடைக்கு போயிருந்த அம்மா வீட்டுக்கு வந்திட்டார். வாசலால் கலைக்க இருக்க அம்மாவுக்கு விருப்பமில்லை பின்ன எலி திரும்பவும் வந்திட்டால்...

உடனே அம்மா அண்ணாவின் கிறிக்கெட் பெட்டைத் தூக்கினார் ஒரே போடாக போடுவதற்கு. ஆனால் எலி தப்பிவிட்டது. வரவேற்பறையையே சுத்தி சுத்தி வந்தது. உடனே ஒரு யோசனை, ஒரு சின்ன பெட்டியை எடுத்து ஒரே அமுக்கு... அப்படியே பெட்டியை தூக்கமல் ஒரு shopping bagக்குள்ள மெல்லமாக அரக்கி அப்படியே கட்டி அம்மாவிடம் கொடுக்க அம்மா றோட்டில் நின்ற குப்பை வண்டிக்குள் போட்டார்.

அதுக்கு பிறகு எலி பயமெல்லாம் போய்விட்டது.
நான் எலி பிடிக்கிறதில் Phd செய்யாத குறைதான். 


கிட்டத்தட்ட 7 தடவைகள் இப்படி எலி பிடித்திருக்கிறேன். 


 

எலி வேட்டை
 

எலி வீட்டுக்குள்ள  இருந்தா (permanent residence) அல்லது வெளியிலிருந்தா (visiting) வருகிறது என்று முதலில் பார்க்க வேண்டும்.

வீட்டிலிருந்து என்றால் வீட்டை நீங்கள் நிச்சயம் ஒதுங்குபடுத்த வேண்டும். ஒன்றையும் விட்டுவைக்காமல் எல்லா அறைகளையும் ஒதுங்குபடுத்த வேண்டும். சில சமயங்களில் அந்த நேரமே வீட்டை விட்டு ஓடிவிட சந்தர்ப்பமுண்டு அதனால் வெளியேறும் கதவை தவிர ஏனைய கதவு யன்னல்களை மூடுவது நல்லது.

சிலவேளைகளில் எலி வீட்டிலேயே cardboard box, பழைய புத்தகங்கள், உடைகள் வைத்திருக்கும் இடங்களில் எலிக்குஞ்சுகளுடன் இருக்க சந்தர்ப்பமுண்டு.

வெளியிலிருந்து வரும் எலிகள் அனேகமாக யன்னல், கதவு ஓட்டைகளுக்குள் புகுந்து வரும் எல்லா இடத்தையும் அடைத்துவிடுங்கள்.

உங்கள் வீட்டு கழிவு வாய்க்கால் பகுதியிலிருந்து எலி வராத மாதிரி drainage cover போட்டு மூடிவிடுங்கள்.

சிலவேளைகளில் உங்கள் washing machine தண்ணீர் வெளிவரும் பகுதி refrigerator பின் பகுதிகளிலும் எலி இருப்பதற்கு இடமுண்டு.



இவை எல்லாம் ஒதுங்கபடுத்தி துப்பரவாக்கிய பிறகும் வீட்டில எலி நிற்கிறதா? 

பூனையை பிடித்து விடவும் (ராஐா வீட்டு பூனை எலி இருக்கும் இடத்தில் கொண்டுபோய் விட்டால்தான் எலியை பிடிப்பாராம்.).  
ராஐா வீட்டு பூனை

பூனை எலியைப் பிடித்தால் முக்கியமாக வீட்டுக்குள் பூனை போகாமல் பார்த்துக்கொள்ளவும். பூனை எலியை பிடித்ததும் அது சரியான இடம் தேடி அலையும் (தொந்தரவு இல்லாமல் எலியை சாப்பிடவேண்டுமாம்). அந்த நேரம் பூனையை அப்படியே தூக்கி வெளியே கொண்டு போய்விடுங்கள். 



பூனை எலியை வாயில் வைத்திருக்கும் நேரம் அதை தூக்கினால் உங்களை கடிக்காது, நகத்தால் விராண்டாது ஆனால் உறுமும் பூனைக்கு பயம் இல்லாதவங்க தைரியமா  தூக்கலாம். பயந்தவங்க கட்டிலுக்கு கீழேயோ எங்கேயோ ஒதுக்குபுறமான இடத்தில விருந்து சாப்பிட்டு வருவார் நீங்க அந்த இடத்தை துப்பரவாக்கி விடுங்க.

பூனையே எலியை பிடிக்காவிட்டால்????
The cat and the rat who struck up an unlikely romance 



இனி பூனை இல்லாதவர்களுக்கு எலி பிடிக்கும் வழிகள்
3 வழிகள் இருக்கிறன.
  1. எலி மருந்து
  2. எலி பொறி 
  3. நீங்களே பொறி. 

எலிக்கு மருந்து வைப்பதென்றால் கவனமாகவே இருக்க வேண்டும். சிறு பிள்ளைகள் இருக்கும் இடத்தில் மருந்தை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத விபத்துகளுக்கு இடங்கொடுக்காமல் இருக்கலாமே...
எலிக்கு மருந்து வைத்தால் அதை எலி சாப்பிட்டால் எங்காவது செத்துப்போய் நாறும்.



                             

எலி பொறி பல வகைகளில் இருக்கிறன.

இது நீங்கள் வழக்கமாக பாவிக்கும் பொறி


Electronic Rat Trap - எந்தவித நச்சு மருந்தோ கைகளுக்கு தீங்கிழைக்கும் பொருட்கள் எதுவும் பொருத்தப்படாமல் எலி பிடிபட்டதும் உள்ளேயே வைத்து பற்றரி மூலம் மின்னியங்கி எலியை கொன்று விடும்.   
பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது.

 
paper முழுவதிலும் இதை பூசி எலி நடமாடும் இடத்தில் வைக்கும் போது அது காற்றுக்கு பறக்காமல் இருப்பது முக்கியம். அப்படியே கைகளில் அல்லது நிலத்தில் பிரண்டால் எப்படி துப்பரவாக்கிறது என்று முதல்லயே பார்த்துக்கொள்ளுங்க.



புத்தகம் போலே இருக்கும் அப்படியே விரித்து வைத்தால் சாி.





  
  
நீங்களே எலி பிடிப்பதற்கு
ஒருவர் தும்புத்தடியுடன் தேவை
எலியை அமுக்கிறதுக்கு தேவையான சின்ன பெட்டி 
நான் பாவித்தது இப்படியான ஐஸ்கிறீம் பெட்டிதான். (அம்மாவுக்கு ஒரு பழக்கம் இப்படியான ஐஸ்கிறீம் பெட்டி தேவைப்பட்டாலும் என்று எடுத்து வைத்திருப்பார், அது பிறகு எங்கள் வீட்டில் எலி பிடிக்கும் பொறியாகியுள்ளது)
 

எலி வெளியே போகவிடாமல் எல்லாப்பக்கமும் அடைத்துவிட்டு தும்புத்தடியுடன் ஒருவர் எலியை ஓடவிடாமல் செய்ய உடனே பெட்டியால் ஒரு அமுக்குதான். அதற்கு பிறகு பெட்டியை தூக்கமல் ஒரு bagக்குள்ள மெல்லமாக அரக்கி மூட வேண்டியது தான்.

 


பி.கு: கடைகளில் வரும் எலிக்கு எப்படி வலை போடவேண்டும் என்ற அனுபவம் அடியேனுக்கு தெரியாது. தெரிந்தால் தெரியப்படுத்துகிறேன்.

 



Saturday, April 27, 2013

முடிஞ்சா கொஞ்சம் உதவ முடியுமா?


சின்ன வயசில சந்தேகம் வந்தா உடனேயே விளக்கம் கேட்டவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க.. இப்போ சந்தேகம் கேட்டா எல்லாரும் பேசுறாங்க. ஏனென்று தெரியல முடிஞ்சா கொஞ்சம் உதவ முடியுமா?????

  • தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் !..
    தர்மம்... மறுபடியும்.. வெல்லும் !
    அப்படி என்றால் நான் என் வேலையை செய்து கொண்டிருக்கும் போது சத்தம் போடாமல் வந்து கடித்து துவம்சம் செய்து ரத்தத்தை உறிஞ்சும் நுளம்புக்கு என்ன நடக்கும்??
    (சத்தியமா நான் நுளம்ப ஒன்றுமே செய்யல.)

     
  • தலையிடிக்குதா?? கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. அப்பதான் இடிக்காது தலை சுவர்ல..


  • R.I.V.E.R றிவர் என்றால் D.R.I.V.E.R டி- றிவர் என்றுதானே வரவேணும் எதுக்கு டிரைவர் என்றாங்க???


  • ஆ... ஊ... என்றா பார்ட்டிய போடு பார்ட்டிய போடு என்றாங்களே.. கொ கேஸ் ஆகிடாதா????


  • “சிக்கனமாக இருப்பது எப்படி” என்று புத்தகம் அடிச்சு வித்தால் லாபம் கிடைக்குமா????? அப்படி கிடைக்குமென்றால் மேலதிக பதிப்புகள் தேவைப்படுமா? இல்ல அடுத்த பாகத்தில் தான் லாபம் கிடைக்குமா??


  •  எப்படி நான் வைச்ச alarm ஒழுங்கா வேலை செய்யாம இருக்கு (அப்படி நான் நினைக்கிறன்) ஆனா குருவி, காக்கா வைக்கிற alarm எல்லாம் நேரந்தவறாம ஒழுங்கா வேலை செய்யுது?????


    ________________________________________________________________________

      தத்துவங்கள்
  •  raincoat இனிது குடை இனிது என்பர் இதுவரை மழையில் நனையாதோர்.

  •  எறும்புகள் வரிசைகட்டி போகுதா?? வடிவா பாருங்க பின்னால டீச்சர் எறும்பு தடியோட போவாங்க.

  •  நீங்க என்னதான் அஜித் fan, விஜய் fan, super star fan, power star fan என்று இருந்தாலும் ceiling fan / table fan இல்ல இல்ல ஒரு விசிறி மட்டை செய்யுற வேலைய உங்களால செய்ய முடியாது.

Saturday, April 6, 2013

மச்சி ஓபன் த பாக்கெட்

ஒரு மாதிரி அந்த ஹோட்டல்ல சாப்பிட்டு முடிஞ்சு, வெய்ட்டர் வந்து சாப்பிட்டாப்பிறகு போடுறத்துக்கு பீடா வெத்தலைக்கு பதிலாக சீரகம் பொறி  அடங்கியிருக்கும்sachet packet கொண்டுவந்து வைச்சது தான் தாமதம், வந்திருந்த கூட்டத்தினர் ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டனர்.

அதில் ஒரு தம்பதியினர் உடனே பக்கெற்றை கிழிச்சு சாப்பிட்டு விட்டனர். அதே நேரம் ஒருவர் ஒரு மாதிரி சண்டை பிடித்து பக்கெற்றை கிழிச்சு விட்டார். கூட வந்த மற்றைய நண்பருக்கு உடைக்க தெரியவில்லை அதனால் வாய்விட்டு கேட்டார் எப்படி வெளியே எடுப்பது என்று. உடனே தம்பதி சமேதராக இருந்த பெண் சொன்னால் அந்த பக்கெற்றில் கறுப்பு கலர் இருக்கிற இடத்தால கிழித்தால் வரும் என்று. உடனே ஏற்கெனவே சண்டை பிடித்து பக்கெற்றை உடைத்த நண்பர் புதுதாக அப்படியே செய்து பார்த்து அலுங்காமல் குழுங்காமல்  பக்கெற்றை வெற்றிகரமாக உடைத்தார்.

வெற்றிகரமாக உடைத்ததால் உடனே தம்பதியினரைப் பார்த்து சொன்னார் நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி ஹோட்டலுக்கு போறது நல்லாவே தெரியுது என்று. அதற்கு அப்பெண் “சம்போ கூட பக்கெற்ல தானே வருது” என்று.

இதற்கு மற்றைய நண்பர்  இந்த “தானே ” என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தம் வரும்.
1. அவங்க ஹோட்டலுக்கு போறது இல்லை / போறது குறைவு
2. உனக்கு சம்போ பக்கெற்ல வாரது தெரியாது.



shampoo sachet packet
இத வாயல கிழிச்சு கீழ கொட்டி / நகத்தால  கிழிச்சு  பிறகு நகம் நோகுது கத்தாமல், பக்கெற்ல எந்த மூலையில கறுப்பு  அடிச்சிருக்கோ அந்த பக்கத்த அப்படியே கிழிச்சால் உள்ளே இருக்கிறது வெளிய கொட்டாமல் அப்படியே பக்குவமா இருக்கும்.


அநேகமான fast food கடைகளில் source packet தான் தருவார்கள்.
இதை வாயால் பிய்த்து உடுப்பெல்லாம் பழுதாக்கி.. மானமே போகும். அதற்காக கத்தரிக்கோல், பிளேட் எல்லாம் கொண்டு திரிய முடியாது. சின்ன வேலைதான். கறுப்பு  எந்த மூலையில அடிச்சிருக்கு என் பார்க்க வேண்டியதுதான்.

சில தயாரிப்புகள் இப்படத்தில் உள்ள மாதிரி வரும், அதாவது சீனி போன்றவை.  இதில் ஒரு பக்க மூலையில் கத்தரிக்கோல் படம் /சின்ன வெட்டு ஒன்று இருக்கும் அதைப்பிடித்து கிழித்தால் சரி.




சிலவற்றில் எப்படி வெளியே எடுப்பது என்றும் எழுதியிருக்கும்.






இதுக்கு மேலயும் உடுப்புகளில் கறை படியிற அளவுக்கு வேலையக் காட்டி வீணாக்கினால் அத துப்புரவாக்கிறது உங்க பொறுப்பு. மற்றவங்க மேல பழி போட்டு வேலையில்ல.

Wednesday, January 16, 2013

லைக்குங்க..

யாரோ சில புண்ணியவாங்கள் ஒன்று கூடி ஆராய்ச்சி செய்தாங்களாம் ஒருத் தர் குறைந்தது 7 தடவையாவது முகபுத்தகத்தை பார்ப்பாரம்.

அப்படி என்னதான் இருக்கு அதில,

நாம போட்டதுக்கு எவனாவது comment போட்டானா லைக்கிறானா என்று பார்க்கிறது.

நாம ஒருத்தனுக்கு  comment போட்டமே அதுக்கு பதில் வந்திருக்கா

எவனாவது ஏதாவது போட்டிருக்கானா..

இதவிட வேற என்னத்த பார்க்கிறது.

ஒரு படம்... ஒரு status.. ஒரு link share பண்ணினால் commentதான் போடமாட்டேங்குறாங்க சரி பிழைச்சு போகட்டும் என்றால் லைக்கமாட்டேன்கிறாங்களா??

அதுக்கு சில யோசனைகள் சொல்லுறன்.
  1. கமெராவில் எடுத்து PC/Laptop ல் transfer செய்த பிறகு அப்படியே facebook album ல போட வேண்டாம்.

    ஏனென்றால்  அதில் சில படங்கள் clear இல்லாமல் இருக்கலாம் (out of focus). சில நேரங்களில் அந்த படங்களில் என்ன இருக்கு என்று உங்களால் கூட பார்க்க முடியாமல் இருக்கும். சிலவேளைகளில் அந்த படம் எதுக்காக எடுத்தது என்றே தெரியாமலிருக்கும். அதை பார்க்கும் உங்க நண்பர் கூட்டத்துக்கு எரிச்சலை உண்டாக்கும்.  அத்துடன் ஒரே மாதிரியான படத்தை திரும்ப திரும்ப upload செய்வது லைக்குகளை குறைக்கும்.


    "நீங்களே பாருங்க இந்த படத்தில என்ன விளங்குதென்று facebook ல போட்டிருக்காங்களோ தெரியல."

    அதனால படங்களை தெரிவு செய்து facebook ல போடுங்க, அப்போ தான் மற்றவங்களும் உங்க படங்களை விரும்பி பார்ப்பாங்க லைக்குவாங்க.
  2. கண்ட கண்ட படங்களையும் share செய்ய வேண்டாம். ஏதோ நீங்க நல்ல உள்ளம் படைத்தவராக இருக்கலாம் அப்படியென்றால் நீங்க நேரடியாக உதவிய செய்யுங்க. பார்க்க முடியாத படங்களை எல்லாம் போட்டு அவனவன்  1 LIKE = 5$, 1 SHARE = 3$, 1 COMMENT = 2$ என்று கூவி கூவி தன்னுடைய postக்கு freeயா power star வேலய காட்டுறான்.


    "இதனால உங்களுக்கு ஏதாவது புண்ணியம் சேருதா இல்ல அந்த படத்தில இருக்கிறவனுக்குதான் காசு போய் சேருதா?"

    ஒருத்தரோட profileல பார்த்தா சந்தோஷமா இருக்கணும்.

    "அநேகமா இந்த profile owner தன் profileலயே பார்க்கமாட்டாங்க போல"

    ஒரு profile முழுக்க இப்படி postகள் இருந்தா நீங்க அடிக்கடி போய் பார்ப்பீங்களா பிறகு எப்படி மற்றவங்களை எதிர்பார்க்க முடியும்? எவனுமே வரமாட்டான். இது உங்க profileல மட்டும் இருந்தா பரவாயில்ல, ஆனா மற்றவங்கட home pageல காட்டும். உங்க மனித நேயத்தை நேரில காட்டுங்க, இல்ல நீங்க மட்டும் ரசியுங்க. இப்படி போட்டு மற்றவங்களை அறுக்காதீங்க.

    "இதுதான் உண்மை. மற்றவங்களுக்கு உதவி செய்யுறவங்க வெளியால சொல்லிக்கொண்டு திரியமாட்டாங்க."

  3. கண்டகண்ட appsகளையும் பாவித்து மற்றவர்களை tag செய்து இம்சை படுத்தாதீர்கள். ஒரு படத்தில இருக்கிறவங்களை tag செய்யுறது சரி ஆனால் உள்ள எல்லாத்திலயும் tag செய்யுறது உங்களுக்கே ஓவரா தெரியல? இவனுக்கு வேற வேலயே இல்ல என்று எல்லாரும் சலிப்படைவாங்க.

    "இந்த apps இனால் உங்களுக்கு என்ன பயன்? apps ownerக்கு உங்க விபரங்கள், படங்களை பாவிப்பதற்கு அனுமதி கொடுக்கின்றீர்கள்"
  4. நீங்க சொந்த கருத்துகளை சொன்னாலும் பரவாயில்ல ஆனால் இன்னொருத்தரோட கருத்தை சொந்தமாக பாவிப்பது, பொதுவுடைமை சமவுடைமை என்று உங்கள் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்லது செய்யுறேன் என்று சொல்லி நீங்க போட்டாலும் யாரும் கவனிக்கமாட்டாங்கள். அந்த pageக்கு தான் hit கூடுமே தவிர உங்களுக்கில்லை.

    "உங்க நெஞ்ச தொட்டு சொல்லுங்க இதில இருக்கிறத நீங்க கடைபிடிக்கிறீங்களா?"
  5. ஏதாவது விசேஷத்துக்கு வாழ்த்து தெரிவிப்பது என்றால் உடனே ஒரு படம் போட்டு உள்ள எல்லா நண்பர்களையும் tag செய்யுறதில என்ன பயன் என்று விளங்கல. சரி tag பண்ணீட்டான் என்று தான் லைக்குவாங்களே தவிர விரும்பி லைக்கமாட்டாங்க. முக்கியமாக விடயம் யாரையாவது tag செய்ய மறந்தால் பிறகு அவங்க உங்க greetingக்கு பதில் போடாமல் விட சந்தர்ப்பமுண்டு.

    "இதில tag செய்திருக்கிற எத்தனை பேருடைய  நண்பர்களுக்கு காட்டும்? Timeline and Tagging Settings ல How can I manage tags people add and tagging suggestions? ல் Review tags people add to your own posts before the tags appear on Facebook? ல் enable என்று போட்டிருப்பாங்க.."
    போடும் வாழ்த்து படங்களை யாரும் போடாதவற்றை தேடி பிடித்து போடுங்க.

    "இதில் யாரையும் tag செய்யவேயில்ல ஆனாலும் லைக்குகளுக்கு பஞ்சமில்லை"

    இவற்றை நீங்கள் தொடர்ந்து செய்வதால் உங்களை உங்கள் நண்பர்கள் தொடர்ச்சியாக பார்வையிடுகின்றனர் என்று நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை. உங்கள் பதிவுகள் hide செய்யப்படுகிறது, அல்லது acquaintance என்ற listல் நீங்கள் சோ்க்கப்படுகிறீர்கள் அல்லது உங்கள் நண்பர் news feedல் உங்கள் பதிவுகளை முக்கியமில்லை என்று updates setting செய்திருக்கலாம். ஆனால் இவையனைத்தும் உங்களுக்கு தெரிவிக்கபடமாட்டாது. நீங்கள்  முக்கியமான பதிவுகள் படங்கள் போட்டாலும் மற்றவர்கள் அதை கவனிக்காமல் போய்விடுவார்கள்.


  6. ஒரு பதிவு போடும்போது மற்றவங்க யாரும் போடாத பதிவுகளாக தேடி போடுங்க. எல்லாரும் போட்டதையே நீங்களும் போட்டால் யாருமே லைக்க மாட்டாங்க.

  7.  facebookல் give & take policy ரொம்ப முக்கியம். நீ என் postஜ லைக்கினால் தான் நானும் லைக்குவேன் என்று இருப்பாங்க. ஆனா நீங்க அவனுடைய எல்லா postயும் லைக்கினால் உங்களுக்கு வேற வேலயே இல்லயா என்று நினைப்பாங்க. அதனால் அவசியமானதை மட்டுமே லைக்குங்க, உங்க மரியாதைய காப்பாத்துங்க.


  8.  ஏதாவது post போட்டு அதற்கு அதிகளவான லைக்குகள் வேணுமென்றால் லீவு நாள் பார்த்து உங்க நண்பர்கள் எந்த நேரம் அதிகளவில் இருப்பார்கள் என்று பார்த்து போட்டால் லைக்குகள் வர சந்தர்ப்பம் இருக்கு. எல்லாரும் கிரிக்கெட்டி போட்டியில் தாங்கள் தான் விளையாடுவது போல் மும்முரமாக TV யில் பார்த்துக்கொண்டு இருந்தால் உங்கள் post சிலவேளைகளில் கவனிக்கபடாமல் போய்விடும். யாருமே லைக்கல அதுக்காக உங்க postகளை நீங்களே லைக் போட்டு உங்க மரியாதைய குறைச்சுக்காதீங்க. உங்களுக்கு பிடிச்சதால தானே போட்டிருக்கிறீங்க. பிறகெதுக்கு லைக்கு.
முடிவு: என்ன செய்தாலும் வித்தியாசமாக செய்யனும் அதை ரசிக்கிற மாதிரியும் இருக்கனும். அப்போ லைக்குகள் தன்னால வரும்.

Tuesday, January 1, 2013

Happy New Day !

அதொன்றும் இல்ல New year என்றாலும் ஒரு நாள் கொண்டாட்டம் தானே..

என்னதான் சொன்னாலும் ஒவ்வொரு நாளும் ஏதாவது கொண்டாட்டம் வந்தால் சலிச்சு போவது உண்மைதான்.





ஆனாலும், எந்நாளும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகள்.