சின்ன வயசில சந்தேகம் வந்தா உடனேயே விளக்கம் கேட்டவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க.. இப்போ சந்தேகம் கேட்டா எல்லாரும் பேசுறாங்க. ஏனென்று தெரியல முடிஞ்சா கொஞ்சம் உதவ முடியுமா?????
- தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் !..
தர்மம்... மறுபடியும்.. வெல்லும் ! (சத்தியமா நான் ஒன்றுமே செய்யல.)
- தலையிடிக்குதா?? கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. அப்பதான் இடிக்காது தலை சுவர்ல..
- R.I.V.E.R றிவர் என்றால் D.R.I.V.E.R டி- றிவர் என்றுதானே வரவேணும் எதுக்கு டிரைவர் என்றாங்க???
- ஆ... ஊ... என்றா பார்ட்டிய போடு பார்ட்டிய போடு என்றாங்களே.. கொல கேஸ் ஆகிடாதா????
- “சிக்கனமாக இருப்பது எப்படி” என்று புத்தகம் அடிச்சு வித்தால் லாபம் கிடைக்குமா????? அப்படி கிடைக்குமென்றால் மேலதிக பதிப்புகள் தேவைப்படுமா? இல்ல அடுத்த பாகத்தில் தான் லாபம் கிடைக்குமா??
- எப்படி நான் வைச்ச alarm ஒழுங்கா வேலை செய்யாம இருக்கு (அப்படி நான் நினைக்கிறன்) ஆனா குருவி, காக்கா வைக்கிற alarm எல்லாம் நேரந்தவறாம ஒழுங்கா வேலை செய்யுது?????
________________________________________________________________________
தத்துவங்கள்
- raincoat இனிது குடை இனிது என்பர் இதுவரை மழையில் நனையாதோர்.
- எறும்புகள் வரிசைகட்டி போகுதா?? வடிவா பாருங்க பின்னால டீச்சர் எறும்பு தடியோட போவாங்க.
- நீங்க என்னதான் அஜித் fan, விஜய் fan, super star fan, power star fan என்று இருந்தாலும் ceiling fan / table fan இல்ல இல்ல ஒரு விசிறி மட்டை செய்யுற வேலைய உங்களால செய்ய முடியாது.





0 comments:
Post a Comment