Unordered List

valaipookkal.com Tamil Blogs

Sunday, July 20, 2014

செடிக்கு கூட ரோஷம் உண்டாம்.

வீட்டுக்கு வெளியே ஒரு செடி நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது. கத்தரி செடியா இருக்குமோ? இல்லை சுண்டங்காய் இல்லை இல்லை அது காட்டு கத்தரி இல்லை அது ஒன்றுமே காய்க்காது சும்மா வளருது.. இப்படியெல்லாம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு குரல்கள் வந்தவண்ணம் இருந்தது.

கிட்டத்தட்ட 3 மாதகாலமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அதை இந்தளவுக்கு வளரவிட்டதே பெரும்பாடாகிவிட்டது. ஏனென்றால் எங்கள் வீட்டு வீதிக்கு மேயவரும் மாடுகளிடமிருந்து தப்பிவிட்டது. அடுத்து எங்கள் வீட்டின் முன் வீட்டுக்காரருக்கு சமூகசேவை உணர்ச்சி அதிகம், அதனால் ஏதாவது செடி அல்லது மரம் வளருவது தெரிந்துவிட்டால் உடனே பிடுங்கிவிடுவார். கேட்டால் அதில் டெங்கு நுளம்பு இருக்கும் என்று சொல்லிவிடுவார்.

இதையெல்லாம் கடந்து வளருதே தவிர அது என்ன செடி என்று கொஞ்சநாளா கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு ஒரு மாதிரி பூ வந்தால் நாவல் கலர் என்றதால் கத்தரி செடி என்று கண்டுபிடித்தோம். பூ பூக்குதே தவிர காய் வரவில்லை. அதனால் அப்பா அதற்கு முன்னால் போய் சொன்னார் ஒரு கிழமை பார்ப்பன் அதுக்குப் பிறகும் ஒன்றும் வராவிட்டால் வெட்டிவிட்டுவன் என்று சொன்னார். அதுக்கு தமிழ் விளங்கிட்டு போல ரோஷம் வந்து காய்க்க தொடங்கிவிட்டது.

றோட் தோட்டத்தில் வளர்ந்த கத்தரிக்காய்
பிறகு காய் கொஞ்சம் வளரும் போது அப்பா பார்த்திட்டு அம்மாவிடம் கேட்டார் என்ன மாதிரி விடுவமா புடுங்குவமா என்று, அம்மா சொன்னார் இப்படியே விட்டால் ரோட்டில போற வாறவங்க புடுங்கிடுவாங்க எங்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்று. அப்பா அது வளர்ந்தது காணும் என்று கத்தரிக்காயை வெட்டிவிட்டார்.

இன்று வீட்டில் மத்தியான சாப்பாட்டில் எங்கள் றோட் தோட்டத்தில் வளர்ந்த கத்தரிக்காய் குழம்புக்குள் குதிக்க தயாராகிவிட்டார்.

3 comments:

ஆஹா! விக்குற விலைவாசில வீட்டுலயே காய்கள்லாம் காய்க்குதா!?

உங்கள், வெளியே வளர்ந்த கத்தரிக்கு ரோசம் அதிகம் போல,
ஆனால் வர வர மனிசனுக்கு ரோசம் குறைஞ்சு போகுது..

@ராஜி:
சாடிக்குள் வைத்து கூட வளர்க்கலாம் நீங்களும் முயற்சி செய்யலாமே..

யோகன் பாரிஸ்(Johan-Paris):
ஆம், மனிசனைத் தவிர மற்ற எல்லாவற்றிற்குமே இருக்கு..

Post a Comment