Unordered List

valaipookkal.com Tamil Blogs

Monday, August 6, 2012

உதவும் கரங்கள்

நடுச்சாமம் கடந்துவிட்ட நிலையில் பேய் கூட தூங்கிடும் (ஹா ஹா என்னை சொல்லல... ) நேரமாம் நான் இன்னும்  தூங்கவில்லை அர்ச்சனை நடக்கிறது எனக்கு... அது சரி அவுங்களுக்கு தெரியுமா நான் எப்பேற்பட்ட உதவி செய்து கொண்டிருக்கிறேன் என்று.

ஒலிம்பிக்கில் தடகள விளையாட்டுக்கள் தொடங்கிச்சுதென்றா அந்த நாள், மணி, நிமிடம், செக்கன் எல்லாம் போறதே தெரியாதே... இப்படி பார்த்துக்கொண்டு இருக்கும் போதுதான் அந்த சம்பவம் கண் முன்னே நடந்தது.
இரவு நேரமாகிவிட்டதால அழையா விருந்தாளிகள் வந்திறங்கிவிட்டாங்க. அவங்களுக்கு சாப்பாடு படுக்கை எதுவும் தேவையில்லை, ஆனால் குடிக்கிறத்துக்கு  ஒரு துளி அதிலும் பாதியிலும் பாதியிலும் பாதியிலும் பாதி இரத்தம் வேணுமாம்.. நாங்க யாரு விடாகண்டனுக்கு கொடாக்கண்டனல்லோ.. விடுவமா நாங்க உயிருக்கே உல வைச்சிடுவமுல்ல. நல்லவேள கொல கேஸ் போட யாருமில்ல.

நானும் பாவம் பிழைச்சு போகட்டும் என்று விட்டா நம்மக்கிட்டயேவா.. ஒரே கும்மியடிதான்.. ஒலிம்பிக்கில் விறுவிறுப்பான போட்டிகள்  நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில கும்மியடி கும்மியடிதான்... விருந்தாளிங்க சிக்கி சின்னாபின்னமாகி கீழே கிடக்கும் போதுதான் எல்லாரும் லைன்னில வாறாங்க.. அவுங்க. ஆளாளுக்கு ஒரு பக்கமா பிச்சுகொண்டு போறாங்க, அப்போதான் நம்ம ஹீரோக்கு ஒரு கால் கிடைக்குது. யப்பா எவ்வ்வ்வளவு நீளமா இருக்கு. ஒரு மாதிரி பலன்ஸ் பண்ணி தூக்கும் போது... ஹ்ஹ்ஹ்ம்ம்ம்... திரும்ப விழுந்திட்டுதே.. இத வீட்டில கொண்டுபோய் சோ்க்கிறதுக்குள்ள பள்ளம் மேடெல்லாம் கடக்கணும். அத அப்படியே போட்டுட்டு அந்த பள்ளத்த எட்டி பார்த்தா, அட இவ்வளவுதானா அவனவன் 100மீற்றர் ஓடுறத்துக்குள்ள வீட்டில கொண்டுபோய் வைச்சுட்டு நாம ஒலிம்பிக் போட்டிகள் பார்க்க வந்திடலாம் என்று போனார் நம்ம ஹீரோ.

நாம பார்க்க இருந்தது என்னவோ ஒலிம்பிக் போட்டிகள்தான், ஆனால் அதுக்காக செய்தது வசமாய் மாட்டிக்கொண்ட நுளம்புகளை அடிச்சு எறும்புகளுக்கு தீனி போட்டதும், அவை கொண்டு போகும் விதத்தை பார்த்ததும்தான்.

ஏதோ நம்மாள முடிந்த உதவி.