Unordered List

valaipookkal.com Tamil Blogs

Wednesday, April 11, 2018

போறபோக்கில மற்றவர்களை சந்தோஷப்படுத்தும் நாயார்.

North Bend, Washingtonக்குக் கிட்ட இருக்கும் Kamikaze Falls என்னும் அருவி பாயும் இடத்தில் மலையேறப்போனவர் ஒரு நாயை கண்டுள்ளார். அந்த நாயார் இவர்களோடு சேர்ந்து மலை ஏறுகிறார்... இவர்கள் படமெடுக்கும் போது பொறுமையா பார்த்துக்கொண்டு இருப்பார் பிறகு அவர்களுக்கு பின்னாலேயே போவார்.


அவருடைய வீட்டுக்காரரும் அவரை போற இடத்துக்கு போய்ட்டு வா என்று விட்டிருக்கிறார்கள். அதோடநாயாருடைய கழுது பட்டியின் 2 பக்கத்திலும் அவரைப் பற்றி எழுதி கட்டி விட்டிருகிறார்கள்.


ஒன்று நான் smokey, பக்கத்தில் தான் இருக்கிறேன் என்னை உங்களுடன் கூட்டிக்கொண்டு போக வேண்டாம், மலையேற வாறவர்களுடன் நானும் போக வேணும்.


அடுத்த வசனம் கவலைப்படவேண்டாம் எனக்கு எப்ப களைப்பா இருக்கோ அப்போ நான் வீட்டுக்கு போவேன் எனது வீட்டுகாரர் என்னில் நல்ல அன்பாக உள்ளனர்.

இந்த நாயார் அங்கு வரும் ஆக்களுக்கு நல்ல உதவியா இருகிறார். பிழையான வழியால் போனால் அல்லது ஆபத்தான இடத்திற்குப் போனால் உடனே குலைத்து அந்தப்பக்கம் போகவேண்டாம் என்று எச்சரிக்கை செய்வார்.

வீடியோ : https://www.facebook.com/100004568703883/videos/1001575926671355/

இவரை அந்தப்பக்கம் மலையேற போன எல்லாரும் கடைசிவரைக்கும் நினைவில் வைத்திருப்பினம்.

அவர் ஊர் சுத்தி நிறைய புது ஆட்களுடன் பழகி நண்பராகி அப்படியே போற போக்கில எல்லோரையும் சந்தோஷப்படுத்துகிறார்.    

Source : abcnews

Friday, January 26, 2018

நவீன திருமணப்பதிவு அழைப்பிதழ்

திருமண பதிவு.

மாலை 7.00 முதல் வரும் சுபமுகூர்த்த வேளையில் பதிவுத்திருமணம் நடைபெறவுள்ளது.
8.00 மணியளவில் விருந்துபசாரம் இடம்பெறும்.

கணனி பதிவுகள்.

மணமகள் மணமகனின் உறவினர்கள் நண்பர்களின் friend requestஐ ஏற்றுக்கொள்வார்.
மணமகன் மணமகளின் உறவினர்கள் நண்பர்களின் friend requestஐ ஏற்றுக்கொள்வார்.

குறிப்பு:
விருந்தினர்கள் தங்கள் smartphone உடன் வருகை தரவும்.
Wi-Fi வசதி உண்டு.

முக்கியகுறிப்பு: ***
அன்பளிப்புகளுடன் வருபவர்களின் friend request உடனடியாக ஏற்கப்படும்.
மற்றையவர்களின் friend requestஐ ஏற்றுக்கொள்ள 5 வேலை நாட்கள் தேவைப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Friday, December 29, 2017

1970களின் மேடை நாடகத்தில் இருந்து சில துளி..





அண்ணை : தம்பி, மகன் எனக்கு ரேடியோ ஒன்டு அனுப்பி இருக்கிறான்

தம்பி : ஓமண்ணை நல்ல விசயம் தானே

அண்ணை : ஓமடா தம்பி.. என்னன்டா மகன் சொன்னான் எறியல் (Aerial wire) வயரை கட்டி திருச்சியில விட்டா டி எம் சொந்தரராசன் சுசீலா எல்லாரும் அதுக்கால இறங்கி வந்து பாடுவினமாம்.
(திருச்சி வானொலி மட்டுமே வேலை செய்யும்)

தம்பி : சரி அண்ணை இப்ப எறியல் வயரை எங்க கட்டுறது

மணி அண்ணை : தென்னை மரத்தில கட்டுவம் நான் மரத்தில ஏறுறன் நீ கீழ இருந்து எறியல் வயரை மேல எறி..

தம்பி : கட்டியாச்சே அண்ணை இனி என்ன செய்யுறது..

மணி அண்ணை : நல்லா எண்ணெயில தோச்சு திருச்சீலையை வைப்பம்
(திருச்சி திருச்சீலையாகிட்டு)

தம்பி : எங்கையண்ணை வைக்கிறது

அண்ணை : எங்கையாவது ஓட்டை இருக்கும் அதில செருகு

தம்பி : இப்ப என்னண்ணை செய்யுறது.. நெருப்ப கொழுத்திவிடுவமே...


Saturday, January 23, 2016

புது வீடு

2 கிழமையாக காலையில் யன்னலைத் திறக்கும் போது பக்கத்து வீட்டு கூரைக்கு மேலே இருந்து ஒரு மீன் கொத்திப் பறவை கீச்சிட்டுக்கொண்டு இருக்கும்.. கேட்டால் தான் வந்திட்டாராம் என்று சொல்லி தன் மற்றைய ஜோடியை கூப்பிடுறாராம். கொஞ்ச நேரத்தில் மற்றைய மீன்கொத்திப் பறவை வந்துவிடும்.



இரண்டு பேரும் சேர்ந்து ஒரு கட்டிடத்தின் பின் பகுதியில் சிமென்ட் உடைந்து செங்கல் வெளியே தொியும் ஒரு பகுதியை தங்கள் பொந்தாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறாங்களாம்.


இவர்கள்தான் அந்த ஜோடி
இருவரும் மாறிமாறி அந்த பொந்தை தங்கள் வசதிக்கேற்ப செதுக்குகிறார்கள். எப்படி அந்த சொண்டால் செங்கல்லை உடைக்கிறார்களோ தொியவில்லை.

2 நாட்களுக்கு முன் மரங்கொத்திப்பறவை வந்து வழமைபோல் கீச்சிட்டுக்கொண்டு இருந்தது.. மற்றைய பறவை வரவில்லை.. கொஞ்ச நேரம் பார்த்துவி்ட்டு போய்விட்டது..

அதன் பிறகு இரண்டும் வரவிவேயில்லை........................

இனி எப்ப வருமோ.. நானும் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.......................

Thursday, October 2, 2014

ச னாவின் கவலை

னா ஒரு நாள் கவலையா இருந்திச்சு. என்னடா இது ஒரு நாளும் இல்லாத திருநாளாம் ச னா இப்படி கவலையா இருக்கே என்னதான் நடந்ததாம் என்று யோசிச்சுக்கொண்டே கேட்டன், ச னா ஏன் கவலையா இருக்கிறாய் என்று.
அப்ப ச னா நான்  எங்க சாப்பிட போனாலும் முழுக்க சாப்பிட விடாம  ஆட்கள் வந்து சாப்பாட்ட குப்பைக்க போடுறாங்க என்று கவலையா சொல்லிச்சு.

எனக்கு விளங்கவில்லை விளக்கமா சொல்லு என்றன்.

ச னா சொல்லிச்சு... எங்க வீட்டில இருக்கிற அம்மா புளிச்சாதம் செய்து எல்லாருக்கும் கொடுத்துட்டு மீதிய வைச்சிருந்தா. நானும் எல்லாரும் சாப்பிட்டாச்சு தானே மிச்சத்த நானும் சாப்பிடுவம் என்று சாப்பிட போனன். நான் மெல்ல மெல்ல சாப்பிட 2 நாளும் ஆகிட்டு சாப்பிட்டு முடியல அதுக்குள்ள வீட்டுக்காாி வந்து புளிச்சாதம் புளிச்சாதம் ஆகிட்டு என்று சொல்லி குப்பைக்க போட்டுட்டா என்று.

அதுக்கு அதுதான் உனக்கு சர்க்கரை பொங்கல், சமோசா என்று எத்தனையோ இருக்கேக்க எதுக்கு புளிச்சலுக்குள்ள போறாய் என்று கேட்டனா உடனே நான் திருந்திடுறன் என்று சொல்லிச்சு ச னா.

எல்லாம் அவன் செயல்...




Saturday, August 9, 2014

வீடியோ தானாக இயங்குவதை நிறுத்துவது எப்படி? - Facebook குறிப்பு

இப்பொழுதெல்லாம் Facebook ன் Settings காரணமாக news feed ல் வரும் வீடியோக்கள் எல்லாம் தானாகவே இயங்குகின்றன. அது சில சமயங்களில் எமக்கு சங்கடங்களைத் தருகின்றது. அதனால் வீடியோ தானாக இயங்குவதை எப்படி நிறுத்துவது என்று யோசிக்கும் உங்களுக்காக..

முதலில் உங்கள் Facebookல் வலது பக்கம் உள்ள பூட்டினை (padlock) அல்லது கீழ் நோக்கி காட்டும் அம்புக்குறியை (down arrow)click செய்து படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு See More Settings OR Settings ஐ click செய்யவும்


அதன்பிறகு videos என்று இருக்கும் link ஐ click செய்யவும்


 
இப்போது உங்களுக்கு video setting பக்கம் வரும்.
Auto-Play Videos உங்களுக்கு on என்று இருந்தால் அதனை off செய்து விடுங்கள்




இனி உங்களுடைய news feedல் வரும் வீடியோக்கள் தானாக இயங்கமாட்டாது.

Sunday, July 20, 2014

செடிக்கு கூட ரோஷம் உண்டாம்.

வீட்டுக்கு வெளியே ஒரு செடி நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது. கத்தரி செடியா இருக்குமோ? இல்லை சுண்டங்காய் இல்லை இல்லை அது காட்டு கத்தரி இல்லை அது ஒன்றுமே காய்க்காது சும்மா வளருது.. இப்படியெல்லாம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு குரல்கள் வந்தவண்ணம் இருந்தது.

கிட்டத்தட்ட 3 மாதகாலமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அதை இந்தளவுக்கு வளரவிட்டதே பெரும்பாடாகிவிட்டது. ஏனென்றால் எங்கள் வீட்டு வீதிக்கு மேயவரும் மாடுகளிடமிருந்து தப்பிவிட்டது. அடுத்து எங்கள் வீட்டின் முன் வீட்டுக்காரருக்கு சமூகசேவை உணர்ச்சி அதிகம், அதனால் ஏதாவது செடி அல்லது மரம் வளருவது தெரிந்துவிட்டால் உடனே பிடுங்கிவிடுவார். கேட்டால் அதில் டெங்கு நுளம்பு இருக்கும் என்று சொல்லிவிடுவார்.

இதையெல்லாம் கடந்து வளருதே தவிர அது என்ன செடி என்று கொஞ்சநாளா கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு ஒரு மாதிரி பூ வந்தால் நாவல் கலர் என்றதால் கத்தரி செடி என்று கண்டுபிடித்தோம். பூ பூக்குதே தவிர காய் வரவில்லை. அதனால் அப்பா அதற்கு முன்னால் போய் சொன்னார் ஒரு கிழமை பார்ப்பன் அதுக்குப் பிறகும் ஒன்றும் வராவிட்டால் வெட்டிவிட்டுவன் என்று சொன்னார். அதுக்கு தமிழ் விளங்கிட்டு போல ரோஷம் வந்து காய்க்க தொடங்கிவிட்டது.

றோட் தோட்டத்தில் வளர்ந்த கத்தரிக்காய்
பிறகு காய் கொஞ்சம் வளரும் போது அப்பா பார்த்திட்டு அம்மாவிடம் கேட்டார் என்ன மாதிரி விடுவமா புடுங்குவமா என்று, அம்மா சொன்னார் இப்படியே விட்டால் ரோட்டில போற வாறவங்க புடுங்கிடுவாங்க எங்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்று. அப்பா அது வளர்ந்தது காணும் என்று கத்தரிக்காயை வெட்டிவிட்டார்.

இன்று வீட்டில் மத்தியான சாப்பாட்டில் எங்கள் றோட் தோட்டத்தில் வளர்ந்த கத்தரிக்காய் குழம்புக்குள் குதிக்க தயாராகிவிட்டார்.