Unordered List

valaipookkal.com Tamil Blogs

Wednesday, April 25, 2018

குரங்கு எடுத்த படத்திற்கு காப்புரிமை குரங்குக்கா, கமெரா உரிமையாளருக்கா?



David J Slater 2011 அளவில் இந்தோனேஷியாவிற்கு குரங்குகளை படமெடுக்க போயிருந்தார் பிறகு Slater tripodல் கமெராவை வைக்க போன நேரம் அங்கிருந்த naruto என்ற பெயருடைய குரங்கு கமெராவை எடுத்துவிட்டது. பிறகு அதுவே shutter ஐ அமத்த அது செல்பிக்களாக வரத்தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட 100 படங்கள் எடுத்திருந்தது. அதில் சில படங்கள் நல்லா இருக்கவே ஊடகங்களுக்கு அனுப்பி இருக்கிறார் Slater. அது உலக அளவில் பரவிவிட்டது. இந்த கதையை விக்கிபீடியா தனது தளத்திலும் குரங்கின் படத்துடன் போட்டுவிட்டது. இதைப்பார்த்த Slater wiki எப்படி எனக்கு உரிமையான படத்தை அதுவும் Royalty-free images என்ற பகுதியில் போடலாம் அதனை எடுத்து விடு என்று சொல்லி wikiக்கு பலதடவைகள் சொல்லியுள்ளார். ஆனால் விக்கி அதை எடுக்க மறுத்துவிடுகிறது. அந்த படத்துக்கு உரிமையாளர் அந்த குரங்குதான், கமெரா வைச்சிருந்தவர் உரிமைகோர முடியாது என்று சொல்லிவிட்டது.

இந்த நேரத்தில் பீட்டா naruto குரங்குக்கு ஆதரவா வந்து ரோயல்டி என்று சொல்லி காசை புடுங்களாம் என்று மூக்கை நுழைத்துள்ளது. Slater அந்த #naruto குரங்கை ஏமாற்றிவிட்டார், இந்த புகைப்படத்தை naruto எடுத்தது அதுதான் இந்தப்படத்தை பயன்படுத்த முடியும் என்றது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று கூறி கலிபோர்னியா நீதிமன்றத்தில் Slaterற்கு எதிராக 2015ம் ஆண்டளவில் வழக்கு தொடுத்தது. அதன்போது Slater இந்த படத்தை விற்கும்போது வரும் காசில் 25% குரங்குகளை பாதுகாக்கும் அமைப்பிடம் கொடுக்கிறேன் என்று சொல்லியுள்ளார். இதற்கு பீட்டாவும் உடன்பட்டு வழக்கை மீள பெற இருக்கும்போது கலிபோர்னியா நீதிமன்றம், பீட்டா அமைப்பை வழக்கை மீளபெற விடாமல் செய்தது.

3 வருடமாக நடந்த வழக்குக்கு தீர்ப்பு இப்பதான் வந்துள்ளது. இதில் பீட்டா மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கண்டித்து இருக்கிறது. அதோடு, அந்த குரங்கு எடுத்த போட்டோவிற்கு, அந்த குரங்கு காப்புரிமை கோர முடியாது, விலங்குகள் பதிப்புரிமை மீறல் வழக்குகளை பதிவு செய்ய முடியாது, இனி வரும் காலங்களில், உங்கள் கேமராவை பயன்படுத்தி ஏதாவது ஒரு விலங்கு புகைப்படம் எடுத்தால், அந்த புகைப்படத்திற்கு அந்த விலங்கோ, #பீட்டா போன்ற விலங்குகள் நலவாரியமோ உரிமை கோர முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

இனியாவது பீட்டாகாரர் பொத்திகொண்டு இருக்கட்டும்..

குறிப்பு: naruto monkey என்று கூகிளாண்டவரிடம் கேட்டால் குரங்கர் விதம்விதமா எடுத்த செல்பீக்கள் வரும்.

Wednesday, April 11, 2018

போறபோக்கில மற்றவர்களை சந்தோஷப்படுத்தும் நாயார்.

North Bend, Washingtonக்குக் கிட்ட இருக்கும் Kamikaze Falls என்னும் அருவி பாயும் இடத்தில் மலையேறப்போனவர் ஒரு நாயை கண்டுள்ளார். அந்த நாயார் இவர்களோடு சேர்ந்து மலை ஏறுகிறார்... இவர்கள் படமெடுக்கும் போது பொறுமையா பார்த்துக்கொண்டு இருப்பார் பிறகு அவர்களுக்கு பின்னாலேயே போவார்.


அவருடைய வீட்டுக்காரரும் அவரை போற இடத்துக்கு போய்ட்டு வா என்று விட்டிருக்கிறார்கள். அதோடநாயாருடைய கழுது பட்டியின் 2 பக்கத்திலும் அவரைப் பற்றி எழுதி கட்டி விட்டிருகிறார்கள்.


ஒன்று நான் smokey, பக்கத்தில் தான் இருக்கிறேன் என்னை உங்களுடன் கூட்டிக்கொண்டு போக வேண்டாம், மலையேற வாறவர்களுடன் நானும் போக வேணும்.


அடுத்த வசனம் கவலைப்படவேண்டாம் எனக்கு எப்ப களைப்பா இருக்கோ அப்போ நான் வீட்டுக்கு போவேன் எனது வீட்டுகாரர் என்னில் நல்ல அன்பாக உள்ளனர்.

இந்த நாயார் அங்கு வரும் ஆக்களுக்கு நல்ல உதவியா இருகிறார். பிழையான வழியால் போனால் அல்லது ஆபத்தான இடத்திற்குப் போனால் உடனே குலைத்து அந்தப்பக்கம் போகவேண்டாம் என்று எச்சரிக்கை செய்வார்.

வீடியோ : https://www.facebook.com/100004568703883/videos/1001575926671355/

இவரை அந்தப்பக்கம் மலையேற போன எல்லாரும் கடைசிவரைக்கும் நினைவில் வைத்திருப்பினம்.

அவர் ஊர் சுத்தி நிறைய புது ஆட்களுடன் பழகி நண்பராகி அப்படியே போற போக்கில எல்லோரையும் சந்தோஷப்படுத்துகிறார்.    

Source : abcnews

Friday, January 26, 2018

நவீன திருமணப்பதிவு அழைப்பிதழ்

திருமண பதிவு.

மாலை 7.00 முதல் வரும் சுபமுகூர்த்த வேளையில் பதிவுத்திருமணம் நடைபெறவுள்ளது.
8.00 மணியளவில் விருந்துபசாரம் இடம்பெறும்.

கணனி பதிவுகள்.

மணமகள் மணமகனின் உறவினர்கள் நண்பர்களின் friend requestஐ ஏற்றுக்கொள்வார்.
மணமகன் மணமகளின் உறவினர்கள் நண்பர்களின் friend requestஐ ஏற்றுக்கொள்வார்.

குறிப்பு:
விருந்தினர்கள் தங்கள் smartphone உடன் வருகை தரவும்.
Wi-Fi வசதி உண்டு.

முக்கியகுறிப்பு: ***
அன்பளிப்புகளுடன் வருபவர்களின் friend request உடனடியாக ஏற்கப்படும்.
மற்றையவர்களின் friend requestஐ ஏற்றுக்கொள்ள 5 வேலை நாட்கள் தேவைப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Friday, December 29, 2017

1970களின் மேடை நாடகத்தில் இருந்து சில துளி..





அண்ணை : தம்பி, மகன் எனக்கு ரேடியோ ஒன்டு அனுப்பி இருக்கிறான்

தம்பி : ஓமண்ணை நல்ல விசயம் தானே

அண்ணை : ஓமடா தம்பி.. என்னன்டா மகன் சொன்னான் எறியல் (Aerial wire) வயரை கட்டி திருச்சியில விட்டா டி எம் சொந்தரராசன் சுசீலா எல்லாரும் அதுக்கால இறங்கி வந்து பாடுவினமாம்.
(திருச்சி வானொலி மட்டுமே வேலை செய்யும்)

தம்பி : சரி அண்ணை இப்ப எறியல் வயரை எங்க கட்டுறது

மணி அண்ணை : தென்னை மரத்தில கட்டுவம் நான் மரத்தில ஏறுறன் நீ கீழ இருந்து எறியல் வயரை மேல எறி..

தம்பி : கட்டியாச்சே அண்ணை இனி என்ன செய்யுறது..

மணி அண்ணை : நல்லா எண்ணெயில தோச்சு திருச்சீலையை வைப்பம்
(திருச்சி திருச்சீலையாகிட்டு)

தம்பி : எங்கையண்ணை வைக்கிறது

அண்ணை : எங்கையாவது ஓட்டை இருக்கும் அதில செருகு

தம்பி : இப்ப என்னண்ணை செய்யுறது.. நெருப்ப கொழுத்திவிடுவமே...


Saturday, January 23, 2016

புது வீடு

2 கிழமையாக காலையில் யன்னலைத் திறக்கும் போது பக்கத்து வீட்டு கூரைக்கு மேலே இருந்து ஒரு மீன் கொத்திப் பறவை கீச்சிட்டுக்கொண்டு இருக்கும்.. கேட்டால் தான் வந்திட்டாராம் என்று சொல்லி தன் மற்றைய ஜோடியை கூப்பிடுறாராம். கொஞ்ச நேரத்தில் மற்றைய மீன்கொத்திப் பறவை வந்துவிடும்.



இரண்டு பேரும் சேர்ந்து ஒரு கட்டிடத்தின் பின் பகுதியில் சிமென்ட் உடைந்து செங்கல் வெளியே தொியும் ஒரு பகுதியை தங்கள் பொந்தாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறாங்களாம்.


இவர்கள்தான் அந்த ஜோடி
இருவரும் மாறிமாறி அந்த பொந்தை தங்கள் வசதிக்கேற்ப செதுக்குகிறார்கள். எப்படி அந்த சொண்டால் செங்கல்லை உடைக்கிறார்களோ தொியவில்லை.

2 நாட்களுக்கு முன் மரங்கொத்திப்பறவை வந்து வழமைபோல் கீச்சிட்டுக்கொண்டு இருந்தது.. மற்றைய பறவை வரவில்லை.. கொஞ்ச நேரம் பார்த்துவி்ட்டு போய்விட்டது..

அதன் பிறகு இரண்டும் வரவிவேயில்லை........................

இனி எப்ப வருமோ.. நானும் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.......................

Thursday, October 2, 2014

ச னாவின் கவலை

னா ஒரு நாள் கவலையா இருந்திச்சு. என்னடா இது ஒரு நாளும் இல்லாத திருநாளாம் ச னா இப்படி கவலையா இருக்கே என்னதான் நடந்ததாம் என்று யோசிச்சுக்கொண்டே கேட்டன், ச னா ஏன் கவலையா இருக்கிறாய் என்று.
அப்ப ச னா நான்  எங்க சாப்பிட போனாலும் முழுக்க சாப்பிட விடாம  ஆட்கள் வந்து சாப்பாட்ட குப்பைக்க போடுறாங்க என்று கவலையா சொல்லிச்சு.

எனக்கு விளங்கவில்லை விளக்கமா சொல்லு என்றன்.

ச னா சொல்லிச்சு... எங்க வீட்டில இருக்கிற அம்மா புளிச்சாதம் செய்து எல்லாருக்கும் கொடுத்துட்டு மீதிய வைச்சிருந்தா. நானும் எல்லாரும் சாப்பிட்டாச்சு தானே மிச்சத்த நானும் சாப்பிடுவம் என்று சாப்பிட போனன். நான் மெல்ல மெல்ல சாப்பிட 2 நாளும் ஆகிட்டு சாப்பிட்டு முடியல அதுக்குள்ள வீட்டுக்காாி வந்து புளிச்சாதம் புளிச்சாதம் ஆகிட்டு என்று சொல்லி குப்பைக்க போட்டுட்டா என்று.

அதுக்கு அதுதான் உனக்கு சர்க்கரை பொங்கல், சமோசா என்று எத்தனையோ இருக்கேக்க எதுக்கு புளிச்சலுக்குள்ள போறாய் என்று கேட்டனா உடனே நான் திருந்திடுறன் என்று சொல்லிச்சு ச னா.

எல்லாம் அவன் செயல்...




Saturday, August 9, 2014

வீடியோ தானாக இயங்குவதை நிறுத்துவது எப்படி? - Facebook குறிப்பு

இப்பொழுதெல்லாம் Facebook ன் Settings காரணமாக news feed ல் வரும் வீடியோக்கள் எல்லாம் தானாகவே இயங்குகின்றன. அது சில சமயங்களில் எமக்கு சங்கடங்களைத் தருகின்றது. அதனால் வீடியோ தானாக இயங்குவதை எப்படி நிறுத்துவது என்று யோசிக்கும் உங்களுக்காக..

முதலில் உங்கள் Facebookல் வலது பக்கம் உள்ள பூட்டினை (padlock) அல்லது கீழ் நோக்கி காட்டும் அம்புக்குறியை (down arrow)click செய்து படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு See More Settings OR Settings ஐ click செய்யவும்


அதன்பிறகு videos என்று இருக்கும் link ஐ click செய்யவும்


 
இப்போது உங்களுக்கு video setting பக்கம் வரும்.
Auto-Play Videos உங்களுக்கு on என்று இருந்தால் அதனை off செய்து விடுங்கள்




இனி உங்களுடைய news feedல் வரும் வீடியோக்கள் தானாக இயங்கமாட்டாது.

Sunday, July 20, 2014

செடிக்கு கூட ரோஷம் உண்டாம்.

வீட்டுக்கு வெளியே ஒரு செடி நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது. கத்தரி செடியா இருக்குமோ? இல்லை சுண்டங்காய் இல்லை இல்லை அது காட்டு கத்தரி இல்லை அது ஒன்றுமே காய்க்காது சும்மா வளருது.. இப்படியெல்லாம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு குரல்கள் வந்தவண்ணம் இருந்தது.

கிட்டத்தட்ட 3 மாதகாலமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அதை இந்தளவுக்கு வளரவிட்டதே பெரும்பாடாகிவிட்டது. ஏனென்றால் எங்கள் வீட்டு வீதிக்கு மேயவரும் மாடுகளிடமிருந்து தப்பிவிட்டது. அடுத்து எங்கள் வீட்டின் முன் வீட்டுக்காரருக்கு சமூகசேவை உணர்ச்சி அதிகம், அதனால் ஏதாவது செடி அல்லது மரம் வளருவது தெரிந்துவிட்டால் உடனே பிடுங்கிவிடுவார். கேட்டால் அதில் டெங்கு நுளம்பு இருக்கும் என்று சொல்லிவிடுவார்.

இதையெல்லாம் கடந்து வளருதே தவிர அது என்ன செடி என்று கொஞ்சநாளா கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு ஒரு மாதிரி பூ வந்தால் நாவல் கலர் என்றதால் கத்தரி செடி என்று கண்டுபிடித்தோம். பூ பூக்குதே தவிர காய் வரவில்லை. அதனால் அப்பா அதற்கு முன்னால் போய் சொன்னார் ஒரு கிழமை பார்ப்பன் அதுக்குப் பிறகும் ஒன்றும் வராவிட்டால் வெட்டிவிட்டுவன் என்று சொன்னார். அதுக்கு தமிழ் விளங்கிட்டு போல ரோஷம் வந்து காய்க்க தொடங்கிவிட்டது.

றோட் தோட்டத்தில் வளர்ந்த கத்தரிக்காய்
பிறகு காய் கொஞ்சம் வளரும் போது அப்பா பார்த்திட்டு அம்மாவிடம் கேட்டார் என்ன மாதிரி விடுவமா புடுங்குவமா என்று, அம்மா சொன்னார் இப்படியே விட்டால் ரோட்டில போற வாறவங்க புடுங்கிடுவாங்க எங்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்று. அப்பா அது வளர்ந்தது காணும் என்று கத்தரிக்காயை வெட்டிவிட்டார்.

இன்று வீட்டில் மத்தியான சாப்பாட்டில் எங்கள் றோட் தோட்டத்தில் வளர்ந்த கத்தரிக்காய் குழம்புக்குள் குதிக்க தயாராகிவிட்டார்.

Saturday, June 21, 2014

நாமும் தமிழர்களா ??


“புலம்பெயர் தமிழர்களே எங்களையும் கொஞ்சம் கவனியுங்களேன்....”

பேஸ்புக் மற்றும் பலப்பல வெப்சைட்களில் உங்கள் ஓய்வு நேரத்தை செலவளித்துக் கொண்டிருப்பீர்கள், இதையும் கொஞ்சம் வாசித்துதான் பாருங்களேன்.

உங்களால் முடிந்தால் இதை பகிருங்கள்.
https://docs.google.com/file/d/0B0TAUuYqgMeQNXNoeUt6SmlobDA (to read or download)

உங்கள் உறவுகளுக்காக  நீங்கள் செய்யும் உதவிகள் பெறுமதிமிக்கவை......



Saturday, June 14, 2014

இன்டைக்கு Father's dayயாமே

இன்று தந்தையர் தினம் என்று ரேடியோவில் சொல்லிச்சு. இத கேட்ட பிறகும் சும்மா இருக்கிறதா என்று நானும் சொன்னன் அப்போய் இன்டைக்கு Father's dayயாம் Happy father day என்றன். அதுக்கு அப்பா சொன்னார், Father's day என்றால் இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. விடியகாத்தால வந்து ஒரு envelope தந்து அதுக்குள்ள ஒரு திறப்பை வைத்து Father's day அப்பா இந்தாங்க Father's day gift வெளியால கார் நிக்குது அதுட திறப்பு தான் இது என்று சொல்லி தரவேணுமாம்.

இதுக்கு நான் Father's day க்கு wish பண்ணாம சும்மா இருந்திருக்கலாமோ??????

Monday, May 26, 2014

களவுகள் பலவிதம்

புதிதாக தொடங்கியிருக்கும் நகை அபகாிப்பு முறையும் கொழுப்பு கூடியவர்களும்...

செய்தி
பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு!- தெஹிவளையில் சம்பவம்.


கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தில் ஒரு பெண்மணி நேற்றுக் காலை 09.30 மணியளவில் வீட்டிலிருந்து பூட்சிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் வந்த ஒருவர் ஐயோ தங்க நகைகளை போட்டுக் கொண்டு இவ்வழியில் செல்லாதீர்கள். முன்னால் கள்வர்கள் இருக்கிறார்கள். எனவே நகைகளை கழற்றி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

உடனடியாக கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றி பணப்பையில் போட முற்பட்ட போது, தாருங்கள் நான் போட்டுத் தருகிறேன் என்று கூறிய அந்த நபர், நகையை எடுத்துக்கொண்டு உள்ளே நகையை வைத்து விட்டேன் என்று பணப்பையை கொடுத்துள்ளார்.
அப்படியே பணப்பையை பெற்றுக்கொண்ட குறித்த பெண்மணி சற்றுத் தூரம் சென்று சந்தேகத்தில் பணப் பையைத் திறந்து பார்த்த போது பையில் தாலிக்கொடி இருக்கவில்லையாம்.

உடனடியாகத் திரும்பிப் பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெஹிவளைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏதாவது சொல்லி நகையை கழட்ட வைத்து பிறகு தாங்க நான் உள்ளே போட்டுத் தாரன் என்று சொல்லி வைக்கிற மாதிரி வைத்து ஏமாற்றிக் கொண்டு  போகும் இம்முறையிலான களவில் பல பேர் தங்கள் நகைகளை இழந்துள்ளனர்.

இச்செய்தி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. ஆனால் நிறைய பேர் பொலிஸில் முறைப்பாடு செய்வதில்லை.

 அப்படியே பொலிஸ் பிடிச்சா மட்டும் என்ன நடக்கபோகிறது கோர்ட் கேஸ் என்று சொல்லி பிறகு ஒரு 4, 5 வருஷம் வழக்கம் போல கம்பிய எண்ணிக்கொண்டு இருக்கும் போது சுதந்திரதினம், வெசக் தினம் என்று நல்லநாள் பெருநாளுக்கு அரசு வெளியே விடும். திரும்ப விட்ட வேலையை தொடங்குவது தானே, வேறென்ன நடக்குமாக்கும்.

இந்த செய்தி வாசித்தவுடன் நமக்கு அந்த கள்ளன் மீது கோபமோ வரவில்லை மாறாக பெண்மணி மீதுதான் வருகிறது. எவ்வளவோ களவுகள் அதனால் ஏற்பட்ட காயங்கள், உயிாிழப்பு பற்றிய செய்திகள் வெளி வந்திருக்கின்றன. அவ்வளவும் தெரிந்து வைத்திருந்தும் இப்படி லூஸ் மாதிாி நகையை போட்டுக்கொண்டு திரியுதே என்று கண்டபடி பேசதான் வரும்.



சம்பவம் 1
ஒரு பெண் தனது நகையை மீட்பதற்காக கள்ளனுடன் போராடியதில் பலத்த காயம், யாரும் உதவ முன்வரவில்லை.

சம்பவம் 2
சங்கிலியை பறிப்பதற்காக பெண்ணை தாக்கி கீழே தள்ளிவிட்டு சங்கிலியை புடுங்கியதால் அப்பெண்ணிற்கு முகமெல்லாம் காயம்.

இவையெல்லாம் பேப்பரில் வரவில்லை தெரிந்தவர்களுக்கு நடந்த கதை. நிச்சயமாக இப்படியான கதைகள் எல்லோருக்குமே தெரியும்.


இம்மாதிரியான செய்திகளுக்கு பிறகு முக்கால்வாசி பேர் தங்கநகைகளை அநாவசியமாக போடுவதில்லை. அநேகமாக கவாிங் தான், அதுவும் சிலவேளைகளில் போடுவதில்லை ஏனென்றால் அது உண்மையான நகை மாதிரி இருக்கும் பிறகு தேவையில்லாமல் கள்ளனை கூப்பிடுவது போல இருக்கும்.

தங்கநகை போடுவதென்றால் பலத்த பாதுகாப்புடன் போடுவார்கள், அதாவது யாராவது ஆண் துணையுடன் போகும் போது அல்லது வீட்டிலிருந்து போய்சேரும் இடம்வரை வாகனத்தில் போய் வரும் போது மட்டுமே..

இங்கு யாரும் நகைகள் போடவில்லையே என்று கௌரவம் பார்ப்பதில்லை. காரணம் அநாவசியமாக ஆஸ்பத்திரிக்கு போகவிருப்பமில்லை.

அப்படியும் நகை போடுபவர்கள் நிச்சயமாக கொழுப்பு கூடியவர்கள்தான்.

விீதியில் சென்று கொண்டிருந்து தமிழ் பெண்ணொருவரின் ஐந்தரைப் பவுண் நிறையுடைய தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த பெண்மணி நேற்றுக் காலை 09.30 மணியளவில் தெஹிவளை பூட்சிட்டி வர்த்தக நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த ஒருவர் மிகவும் சூட்சுமமான முறையில் தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வீட்டிலிருந்து பூட்சிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் வந்த ஒருவர் ஐயோ தங்க நகைகளை போட்டுக் கொண்டு இவ்வழியில் செல்லாதீர்கள். முன்னால் கள்வர்கள் இருக்கிறார்கள். எனவே நகைகளை கழற்றி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
உடனடியாக கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றி பணப்பையில் போட முற்பட்ட போது, தாருங்கள் நான் போட்டுத் தருகிறேன் என்று கூறிய அந்த நபர், நகையை எடுத்துக்கொண்டு உள்ளே நகையை வைத்து விட்டேன் என்று பணப்பையை கொடுத்துள்ளார்.
அப்படியே பணப்பையை பெற்றுக்கொண்ட குறித்த பெண்மணி சற்றுத் தூரம் சென்று சந்தேகத்தில் பணப் பையைத் திறந்து பார்த்த போது பையில் தாலிக்கொடி இருக்கவில்லையாம்.
உடனடியாகத் திரும்பிப் பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெஹிவளைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFRZLZkr7.html#sthash.QgGrFfsz.dpuf
விீதியில் சென்று கொண்டிருந்து தமிழ் பெண்ணொருவரின் ஐந்தரைப் பவுண் நிறையுடைய தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த பெண்மணி நேற்றுக் காலை 09.30 மணியளவில் தெஹிவளை பூட்சிட்டி வர்த்தக நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த ஒருவர் மிகவும் சூட்சுமமான முறையில் தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வீட்டிலிருந்து பூட்சிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் வந்த ஒருவர் ஐயோ தங்க நகைகளை போட்டுக் கொண்டு இவ்வழியில் செல்லாதீர்கள். முன்னால் கள்வர்கள் இருக்கிறார்கள். எனவே நகைகளை கழற்றி பையில் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
உடனடியாக கழுத்திலிருந்த தாலிக்கொடியைக் கழற்றி பணப்பையில் போட முற்பட்ட போது, தாருங்கள் நான் போட்டுத் தருகிறேன் என்று கூறிய அந்த நபர், நகையை எடுத்துக்கொண்டு உள்ளே நகையை வைத்து விட்டேன் என்று பணப்பையை கொடுத்துள்ளார்.
அப்படியே பணப்பையை பெற்றுக்கொண்ட குறித்த பெண்மணி சற்றுத் தூரம் சென்று சந்தேகத்தில் பணப் பையைத் திறந்து பார்த்த போது பையில் தாலிக்கொடி இருக்கவில்லையாம்.
உடனடியாகத் திரும்பிப் பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி தெஹிவளைப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFRZLZkr7.html#sthash.QgGrFfsz.dpuf

Monday, April 21, 2014

ஓர் இரவு...

எனக்கு English எல்லாம் பாடசாலை காலத்திலிருந்தே கொஞ்சம் அப்படி இப்படித்தான். எப்படியாவது borderல pass mark எடுத்திடுவன். O/L, A/L exam க்கு எப்படியோ credit எடுத்துவிட்டேன். A/L க்கு பிறகு Degree படிக்க போனேன் முழுக்க முழுக்க Englishதான். பிறகு எப்படியோ எனக்கு பழகிவிட்டது.

Facebook  எனக்கு அறிமுகமாகியது  2007ல் தான். அது வந்த பிறகுதான் நிறைய விசயம் எனக்கு English ல  தெரியவந்தது. 

Facebookல் அந்த நேரம் வந்த அநேகமான apps எல்லாவற்றையும் install செய்திருக்கிறேன். அதிலொன்றில் (apps பெயர் ஞாபகமில்லை) நாங்கள் அருமை பெருமையாக செய்தவற்றை  எங்கள் விருப்பங்களை, கேள்விகளாக கேட்கும். அதில் 2 options தான் விடைகளாக வரும் அதையே நாங்கள் தொிவு செய்ய வேண்டும். 

உதாரணமாக:-
1. What is your favorite brand  - Pepsi | Coke
2. Have You Ever Stolen Something from any shop? - Yes | No


இந்த ஒரு தொகை கேள்விகளில் எங்களுக்கு விருப்பமில்லாதவற்றை தவிர்க்கலாம்.

இப்படிக் கேட்டுக்கொண்டு வரும் போது ஒரு கேள்வி வந்தது.
Have you ever had a one night stand?



நான் assignments செய்வதற்காக இரவிரவாக நித்திரை முழித்து  செய்து கொண்டிருந்த நேரங்கள், முழு இரவும் முழித்திருந்த காலமும் உண்டு. அதனால் இந்த கேள்வி வந்ததும்  “அட இரவு முழுக்க கொட்டகொட்ட முழிச்சிருந்தியா என்று வேற கேட்கிறானே” என்று யோசித்து Yes என்று பதில் போட்டுவிட்டு public ல post செய்து விட்டேன். 

 பிறகு அடுத்த நாள் சும்மா பார்த்துகொண்டு போகும் போதுதான் எனக்கு உறைத்தது இது வேற எதையோ கேட்கிற மாதிரி இருக்கே என்று. dating மாதிாி ஏதோ போல என்று அக்கேள்வியை அழித்து விட்டேன். (அதுக்குள்ள எத்தனை பேர் பார்த்து முகஞ்சுழ்ச்சாங்களோ தெரியல.)  அந்த நேரம் google ல search பண்ணவேயில்ல - நம்பினால் நம்புங்க  - இப்ப இத எழுதுவதற்காக தான் search பண்ணி பார்த்தன்.


இதே மாதிரிதான் Google chat ல ஒரு இரவு நேரம் நான் நண்பியுடன் chat பண்ணிக்கொண்டிருந்தன். அதே நேரம் அவள் தெலைபேசியில் கதைத்தாள். chat ல் என் முழு விபரங்களும் கேட்கப்பட்டுக்கொண்டு இருந்தது. எப்பவுமே முசுப்பாத்தியாக கதைப்பதால் கேட்ட கேள்விகள் எல்லாத்துக்கும் royal family range ல தான் பதில் போட்டுக்கொண்டு இருந்தன். ஆனாலும் சின்ன யோசனை
தெலைபேசியில் கதைக்கும் போது chat பண்றத பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று, ஆனாலும் chat தொடர்ந்தது. (எல்லாம்  english தான், நாங்கதான் அதி மேதாவிகளே!!)

அப்போதான் அப்பா பக்கத்தில இருந்து பார்த்தார்.
யாரோட chat நடக்குது என்று கேட்டார் 
நான் என் நண்பி பெயரை சொன்னன்
அப்போ அப்பா சொன்னார் என்ன இப்படி எல்லாம் chat பண்ணுறாய் என்ன இருக்கு என்று பார்த்தா reply போடுகிறாய் என்று கேட்டார்
நான் சொன்னன், இல்ல அவ போட்டா நானும் reply போடுறேன் என்று.
அதெல்லாம் கூடாத சொல்லுகள் பாவிபட்டுக்கொண்டிருக்கு என்றார். (சத்தியமா எனக்கு அது தெரியாது)

 உடனேயே நான் திரும்ப தெலைபேசியில் கேட்டேன், நீ இப்ப என்னோட chat பண்ணிக்கொண்டு இருக்கிறாயா என்று. அவள் உடனே இல்லையே என்றாள். சும்மா விளையாட்டுக்கும் பொய் சொல்வதால் முதலில் நம்பவில்லை பிறகு chat history எல்லாம் அனுப்பினேன்.

அதுக்கு பிறகு தான் விளங்கிச்சு, அவள் office email id ஐ logout செய்யாமல் வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவள் பாவிக்கும் கணணி அவளுக்கென்றே பிரத்தியோகமானது இல்லை, அதனால் office ல் இரவு நேரம் வேலை செய்த யாரோ தான் விளையாட்டு காட்டியிருக்குது. 

அடுத்த நாள் முதல் வேலையாக Boss இடம் சொல்லி பிறகு  office email id யில் உள்ள email address எல்லாவற்றையும் delete பண்ணிவிட்டாள். நல்லவேளை அந்த எருமை மாடு அதுக்கு பிறகு ஒரு சேட்டைக்கும் வரவில்லை.

அப்பா அப்பவே கேட்டார் நான் போய் Office கண்ணாடியை உடைக்கவா என்று.. ஒரு வேளை அந்த எருமை மாடு திரும்ப வந்திருந்தால் ???????????? நான் பொறுப்பில்லை.. ஹிஹிஹிஹி..


இப்பவெல்லாம் கூகிளாண்டவர் துணையுடன் தான் வலம் வருகின்றேன்.

Saturday, October 19, 2013

எலி பிடிக்க வாறீகளா???

அது ஒரு இரவு நேரம் ஆகிக்கொண்டு இருந்தது. வீட்டில் மெகாசீரியலுடன் முழ்கியிருந்த நேரம். அந்த நேரம் ஒருத்தர் யன்னலால வந்தார். இவ்வளவு நாளும் நித்திரை கொண்டபிறகு வாரவர் இப்ப இந்த நேரம் வந்திட்டார் (ஒருவேளை அவருடைய மணிக்கூடு முந்தி ஓடிட்டோ?)

 அவரைக் கண்டவுடனேயே அறைக்கதவுகள் எல்லாவற்றையும் மூடியாச்சு. ஒரு மாதிரி அடுப்படியில் இருந்து வரவேற்பறை வரைக்கும் கலைச்சாச்சு. அதற்குள் கடைக்கு போயிருந்த அம்மா வீட்டுக்கு வந்திட்டார். வாசலால் கலைக்க இருக்க அம்மாவுக்கு விருப்பமில்லை பின்ன எலி திரும்பவும் வந்திட்டால்...

உடனே அம்மா அண்ணாவின் கிறிக்கெட் பெட்டைத் தூக்கினார் ஒரே போடாக போடுவதற்கு. ஆனால் எலி தப்பிவிட்டது. வரவேற்பறையையே சுத்தி சுத்தி வந்தது. உடனே ஒரு யோசனை, ஒரு சின்ன பெட்டியை எடுத்து ஒரே அமுக்கு... அப்படியே பெட்டியை தூக்கமல் ஒரு shopping bagக்குள்ள மெல்லமாக அரக்கி அப்படியே கட்டி அம்மாவிடம் கொடுக்க அம்மா றோட்டில் நின்ற குப்பை வண்டிக்குள் போட்டார்.

அதுக்கு பிறகு எலி பயமெல்லாம் போய்விட்டது.
நான் எலி பிடிக்கிறதில் Phd செய்யாத குறைதான். 


கிட்டத்தட்ட 7 தடவைகள் இப்படி எலி பிடித்திருக்கிறேன். 


 

எலி வேட்டை
 

எலி வீட்டுக்குள்ள  இருந்தா (permanent residence) அல்லது வெளியிலிருந்தா (visiting) வருகிறது என்று முதலில் பார்க்க வேண்டும்.

வீட்டிலிருந்து என்றால் வீட்டை நீங்கள் நிச்சயம் ஒதுங்குபடுத்த வேண்டும். ஒன்றையும் விட்டுவைக்காமல் எல்லா அறைகளையும் ஒதுங்குபடுத்த வேண்டும். சில சமயங்களில் அந்த நேரமே வீட்டை விட்டு ஓடிவிட சந்தர்ப்பமுண்டு அதனால் வெளியேறும் கதவை தவிர ஏனைய கதவு யன்னல்களை மூடுவது நல்லது.

சிலவேளைகளில் எலி வீட்டிலேயே cardboard box, பழைய புத்தகங்கள், உடைகள் வைத்திருக்கும் இடங்களில் எலிக்குஞ்சுகளுடன் இருக்க சந்தர்ப்பமுண்டு.

வெளியிலிருந்து வரும் எலிகள் அனேகமாக யன்னல், கதவு ஓட்டைகளுக்குள் புகுந்து வரும் எல்லா இடத்தையும் அடைத்துவிடுங்கள்.

உங்கள் வீட்டு கழிவு வாய்க்கால் பகுதியிலிருந்து எலி வராத மாதிரி drainage cover போட்டு மூடிவிடுங்கள்.

சிலவேளைகளில் உங்கள் washing machine தண்ணீர் வெளிவரும் பகுதி refrigerator பின் பகுதிகளிலும் எலி இருப்பதற்கு இடமுண்டு.



இவை எல்லாம் ஒதுங்கபடுத்தி துப்பரவாக்கிய பிறகும் வீட்டில எலி நிற்கிறதா? 

பூனையை பிடித்து விடவும் (ராஐா வீட்டு பூனை எலி இருக்கும் இடத்தில் கொண்டுபோய் விட்டால்தான் எலியை பிடிப்பாராம்.).  
ராஐா வீட்டு பூனை

பூனை எலியைப் பிடித்தால் முக்கியமாக வீட்டுக்குள் பூனை போகாமல் பார்த்துக்கொள்ளவும். பூனை எலியை பிடித்ததும் அது சரியான இடம் தேடி அலையும் (தொந்தரவு இல்லாமல் எலியை சாப்பிடவேண்டுமாம்). அந்த நேரம் பூனையை அப்படியே தூக்கி வெளியே கொண்டு போய்விடுங்கள். 



பூனை எலியை வாயில் வைத்திருக்கும் நேரம் அதை தூக்கினால் உங்களை கடிக்காது, நகத்தால் விராண்டாது ஆனால் உறுமும் பூனைக்கு பயம் இல்லாதவங்க தைரியமா  தூக்கலாம். பயந்தவங்க கட்டிலுக்கு கீழேயோ எங்கேயோ ஒதுக்குபுறமான இடத்தில விருந்து சாப்பிட்டு வருவார் நீங்க அந்த இடத்தை துப்பரவாக்கி விடுங்க.

பூனையே எலியை பிடிக்காவிட்டால்????
The cat and the rat who struck up an unlikely romance 



இனி பூனை இல்லாதவர்களுக்கு எலி பிடிக்கும் வழிகள்
3 வழிகள் இருக்கிறன.
  1. எலி மருந்து
  2. எலி பொறி 
  3. நீங்களே பொறி. 

எலிக்கு மருந்து வைப்பதென்றால் கவனமாகவே இருக்க வேண்டும். சிறு பிள்ளைகள் இருக்கும் இடத்தில் மருந்தை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத விபத்துகளுக்கு இடங்கொடுக்காமல் இருக்கலாமே...
எலிக்கு மருந்து வைத்தால் அதை எலி சாப்பிட்டால் எங்காவது செத்துப்போய் நாறும்.



                             

எலி பொறி பல வகைகளில் இருக்கிறன.

இது நீங்கள் வழக்கமாக பாவிக்கும் பொறி


Electronic Rat Trap - எந்தவித நச்சு மருந்தோ கைகளுக்கு தீங்கிழைக்கும் பொருட்கள் எதுவும் பொருத்தப்படாமல் எலி பிடிபட்டதும் உள்ளேயே வைத்து பற்றரி மூலம் மின்னியங்கி எலியை கொன்று விடும்.   
பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது.

 
paper முழுவதிலும் இதை பூசி எலி நடமாடும் இடத்தில் வைக்கும் போது அது காற்றுக்கு பறக்காமல் இருப்பது முக்கியம். அப்படியே கைகளில் அல்லது நிலத்தில் பிரண்டால் எப்படி துப்பரவாக்கிறது என்று முதல்லயே பார்த்துக்கொள்ளுங்க.



புத்தகம் போலே இருக்கும் அப்படியே விரித்து வைத்தால் சாி.





  
  
நீங்களே எலி பிடிப்பதற்கு
ஒருவர் தும்புத்தடியுடன் தேவை
எலியை அமுக்கிறதுக்கு தேவையான சின்ன பெட்டி 
நான் பாவித்தது இப்படியான ஐஸ்கிறீம் பெட்டிதான். (அம்மாவுக்கு ஒரு பழக்கம் இப்படியான ஐஸ்கிறீம் பெட்டி தேவைப்பட்டாலும் என்று எடுத்து வைத்திருப்பார், அது பிறகு எங்கள் வீட்டில் எலி பிடிக்கும் பொறியாகியுள்ளது)
 

எலி வெளியே போகவிடாமல் எல்லாப்பக்கமும் அடைத்துவிட்டு தும்புத்தடியுடன் ஒருவர் எலியை ஓடவிடாமல் செய்ய உடனே பெட்டியால் ஒரு அமுக்குதான். அதற்கு பிறகு பெட்டியை தூக்கமல் ஒரு bagக்குள்ள மெல்லமாக அரக்கி மூட வேண்டியது தான்.

 


பி.கு: கடைகளில் வரும் எலிக்கு எப்படி வலை போடவேண்டும் என்ற அனுபவம் அடியேனுக்கு தெரியாது. தெரிந்தால் தெரியப்படுத்துகிறேன்.

 



Saturday, April 27, 2013

முடிஞ்சா கொஞ்சம் உதவ முடியுமா?


சின்ன வயசில சந்தேகம் வந்தா உடனேயே விளக்கம் கேட்டவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க.. இப்போ சந்தேகம் கேட்டா எல்லாரும் பேசுறாங்க. ஏனென்று தெரியல முடிஞ்சா கொஞ்சம் உதவ முடியுமா?????

  • தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் !..
    தர்மம்... மறுபடியும்.. வெல்லும் !
    அப்படி என்றால் நான் என் வேலையை செய்து கொண்டிருக்கும் போது சத்தம் போடாமல் வந்து கடித்து துவம்சம் செய்து ரத்தத்தை உறிஞ்சும் நுளம்புக்கு என்ன நடக்கும்??
    (சத்தியமா நான் நுளம்ப ஒன்றுமே செய்யல.)

     
  • தலையிடிக்குதா?? கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. அப்பதான் இடிக்காது தலை சுவர்ல..


  • R.I.V.E.R றிவர் என்றால் D.R.I.V.E.R டி- றிவர் என்றுதானே வரவேணும் எதுக்கு டிரைவர் என்றாங்க???


  • ஆ... ஊ... என்றா பார்ட்டிய போடு பார்ட்டிய போடு என்றாங்களே.. கொ கேஸ் ஆகிடாதா????


  • “சிக்கனமாக இருப்பது எப்படி” என்று புத்தகம் அடிச்சு வித்தால் லாபம் கிடைக்குமா????? அப்படி கிடைக்குமென்றால் மேலதிக பதிப்புகள் தேவைப்படுமா? இல்ல அடுத்த பாகத்தில் தான் லாபம் கிடைக்குமா??


  •  எப்படி நான் வைச்ச alarm ஒழுங்கா வேலை செய்யாம இருக்கு (அப்படி நான் நினைக்கிறன்) ஆனா குருவி, காக்கா வைக்கிற alarm எல்லாம் நேரந்தவறாம ஒழுங்கா வேலை செய்யுது?????


    ________________________________________________________________________

      தத்துவங்கள்
  •  raincoat இனிது குடை இனிது என்பர் இதுவரை மழையில் நனையாதோர்.

  •  எறும்புகள் வரிசைகட்டி போகுதா?? வடிவா பாருங்க பின்னால டீச்சர் எறும்பு தடியோட போவாங்க.

  •  நீங்க என்னதான் அஜித் fan, விஜய் fan, super star fan, power star fan என்று இருந்தாலும் ceiling fan / table fan இல்ல இல்ல ஒரு விசிறி மட்டை செய்யுற வேலைய உங்களால செய்ய முடியாது.

Saturday, April 6, 2013

மச்சி ஓபன் த பாக்கெட்

ஒரு மாதிரி அந்த ஹோட்டல்ல சாப்பிட்டு முடிஞ்சு, வெய்ட்டர் வந்து சாப்பிட்டாப்பிறகு போடுறத்துக்கு பீடா வெத்தலைக்கு பதிலாக சீரகம் பொறி  அடங்கியிருக்கும்sachet packet கொண்டுவந்து வைச்சது தான் தாமதம், வந்திருந்த கூட்டத்தினர் ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டனர்.

அதில் ஒரு தம்பதியினர் உடனே பக்கெற்றை கிழிச்சு சாப்பிட்டு விட்டனர். அதே நேரம் ஒருவர் ஒரு மாதிரி சண்டை பிடித்து பக்கெற்றை கிழிச்சு விட்டார். கூட வந்த மற்றைய நண்பருக்கு உடைக்க தெரியவில்லை அதனால் வாய்விட்டு கேட்டார் எப்படி வெளியே எடுப்பது என்று. உடனே தம்பதி சமேதராக இருந்த பெண் சொன்னால் அந்த பக்கெற்றில் கறுப்பு கலர் இருக்கிற இடத்தால கிழித்தால் வரும் என்று. உடனே ஏற்கெனவே சண்டை பிடித்து பக்கெற்றை உடைத்த நண்பர் புதுதாக அப்படியே செய்து பார்த்து அலுங்காமல் குழுங்காமல்  பக்கெற்றை வெற்றிகரமாக உடைத்தார்.

வெற்றிகரமாக உடைத்ததால் உடனே தம்பதியினரைப் பார்த்து சொன்னார் நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி ஹோட்டலுக்கு போறது நல்லாவே தெரியுது என்று. அதற்கு அப்பெண் “சம்போ கூட பக்கெற்ல தானே வருது” என்று.

இதற்கு மற்றைய நண்பர்  இந்த “தானே ” என்ற சொல்லுக்கு நிறைய அர்த்தம் வரும்.
1. அவங்க ஹோட்டலுக்கு போறது இல்லை / போறது குறைவு
2. உனக்கு சம்போ பக்கெற்ல வாரது தெரியாது.



shampoo sachet packet
இத வாயல கிழிச்சு கீழ கொட்டி / நகத்தால  கிழிச்சு  பிறகு நகம் நோகுது கத்தாமல், பக்கெற்ல எந்த மூலையில கறுப்பு  அடிச்சிருக்கோ அந்த பக்கத்த அப்படியே கிழிச்சால் உள்ளே இருக்கிறது வெளிய கொட்டாமல் அப்படியே பக்குவமா இருக்கும்.


அநேகமான fast food கடைகளில் source packet தான் தருவார்கள்.
இதை வாயால் பிய்த்து உடுப்பெல்லாம் பழுதாக்கி.. மானமே போகும். அதற்காக கத்தரிக்கோல், பிளேட் எல்லாம் கொண்டு திரிய முடியாது. சின்ன வேலைதான். கறுப்பு  எந்த மூலையில அடிச்சிருக்கு என் பார்க்க வேண்டியதுதான்.

சில தயாரிப்புகள் இப்படத்தில் உள்ள மாதிரி வரும், அதாவது சீனி போன்றவை.  இதில் ஒரு பக்க மூலையில் கத்தரிக்கோல் படம் /சின்ன வெட்டு ஒன்று இருக்கும் அதைப்பிடித்து கிழித்தால் சரி.




சிலவற்றில் எப்படி வெளியே எடுப்பது என்றும் எழுதியிருக்கும்.






இதுக்கு மேலயும் உடுப்புகளில் கறை படியிற அளவுக்கு வேலையக் காட்டி வீணாக்கினால் அத துப்புரவாக்கிறது உங்க பொறுப்பு. மற்றவங்க மேல பழி போட்டு வேலையில்ல.

Wednesday, January 16, 2013

லைக்குங்க..

யாரோ சில புண்ணியவாங்கள் ஒன்று கூடி ஆராய்ச்சி செய்தாங்களாம் ஒருத் தர் குறைந்தது 7 தடவையாவது முகபுத்தகத்தை பார்ப்பாரம்.

அப்படி என்னதான் இருக்கு அதில,

நாம போட்டதுக்கு எவனாவது comment போட்டானா லைக்கிறானா என்று பார்க்கிறது.

நாம ஒருத்தனுக்கு  comment போட்டமே அதுக்கு பதில் வந்திருக்கா

எவனாவது ஏதாவது போட்டிருக்கானா..

இதவிட வேற என்னத்த பார்க்கிறது.

ஒரு படம்... ஒரு status.. ஒரு link share பண்ணினால் commentதான் போடமாட்டேங்குறாங்க சரி பிழைச்சு போகட்டும் என்றால் லைக்கமாட்டேன்கிறாங்களா??

அதுக்கு சில யோசனைகள் சொல்லுறன்.
  1. கமெராவில் எடுத்து PC/Laptop ல் transfer செய்த பிறகு அப்படியே facebook album ல போட வேண்டாம்.

    ஏனென்றால்  அதில் சில படங்கள் clear இல்லாமல் இருக்கலாம் (out of focus). சில நேரங்களில் அந்த படங்களில் என்ன இருக்கு என்று உங்களால் கூட பார்க்க முடியாமல் இருக்கும். சிலவேளைகளில் அந்த படம் எதுக்காக எடுத்தது என்றே தெரியாமலிருக்கும். அதை பார்க்கும் உங்க நண்பர் கூட்டத்துக்கு எரிச்சலை உண்டாக்கும்.  அத்துடன் ஒரே மாதிரியான படத்தை திரும்ப திரும்ப upload செய்வது லைக்குகளை குறைக்கும்.


    "நீங்களே பாருங்க இந்த படத்தில என்ன விளங்குதென்று facebook ல போட்டிருக்காங்களோ தெரியல."

    அதனால படங்களை தெரிவு செய்து facebook ல போடுங்க, அப்போ தான் மற்றவங்களும் உங்க படங்களை விரும்பி பார்ப்பாங்க லைக்குவாங்க.
  2. கண்ட கண்ட படங்களையும் share செய்ய வேண்டாம். ஏதோ நீங்க நல்ல உள்ளம் படைத்தவராக இருக்கலாம் அப்படியென்றால் நீங்க நேரடியாக உதவிய செய்யுங்க. பார்க்க முடியாத படங்களை எல்லாம் போட்டு அவனவன்  1 LIKE = 5$, 1 SHARE = 3$, 1 COMMENT = 2$ என்று கூவி கூவி தன்னுடைய postக்கு freeயா power star வேலய காட்டுறான்.


    "இதனால உங்களுக்கு ஏதாவது புண்ணியம் சேருதா இல்ல அந்த படத்தில இருக்கிறவனுக்குதான் காசு போய் சேருதா?"

    ஒருத்தரோட profileல பார்த்தா சந்தோஷமா இருக்கணும்.

    "அநேகமா இந்த profile owner தன் profileலயே பார்க்கமாட்டாங்க போல"

    ஒரு profile முழுக்க இப்படி postகள் இருந்தா நீங்க அடிக்கடி போய் பார்ப்பீங்களா பிறகு எப்படி மற்றவங்களை எதிர்பார்க்க முடியும்? எவனுமே வரமாட்டான். இது உங்க profileல மட்டும் இருந்தா பரவாயில்ல, ஆனா மற்றவங்கட home pageல காட்டும். உங்க மனித நேயத்தை நேரில காட்டுங்க, இல்ல நீங்க மட்டும் ரசியுங்க. இப்படி போட்டு மற்றவங்களை அறுக்காதீங்க.

    "இதுதான் உண்மை. மற்றவங்களுக்கு உதவி செய்யுறவங்க வெளியால சொல்லிக்கொண்டு திரியமாட்டாங்க."

  3. கண்டகண்ட appsகளையும் பாவித்து மற்றவர்களை tag செய்து இம்சை படுத்தாதீர்கள். ஒரு படத்தில இருக்கிறவங்களை tag செய்யுறது சரி ஆனால் உள்ள எல்லாத்திலயும் tag செய்யுறது உங்களுக்கே ஓவரா தெரியல? இவனுக்கு வேற வேலயே இல்ல என்று எல்லாரும் சலிப்படைவாங்க.

    "இந்த apps இனால் உங்களுக்கு என்ன பயன்? apps ownerக்கு உங்க விபரங்கள், படங்களை பாவிப்பதற்கு அனுமதி கொடுக்கின்றீர்கள்"
  4. நீங்க சொந்த கருத்துகளை சொன்னாலும் பரவாயில்ல ஆனால் இன்னொருத்தரோட கருத்தை சொந்தமாக பாவிப்பது, பொதுவுடைமை சமவுடைமை என்று உங்கள் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்லது செய்யுறேன் என்று சொல்லி நீங்க போட்டாலும் யாரும் கவனிக்கமாட்டாங்கள். அந்த pageக்கு தான் hit கூடுமே தவிர உங்களுக்கில்லை.

    "உங்க நெஞ்ச தொட்டு சொல்லுங்க இதில இருக்கிறத நீங்க கடைபிடிக்கிறீங்களா?"
  5. ஏதாவது விசேஷத்துக்கு வாழ்த்து தெரிவிப்பது என்றால் உடனே ஒரு படம் போட்டு உள்ள எல்லா நண்பர்களையும் tag செய்யுறதில என்ன பயன் என்று விளங்கல. சரி tag பண்ணீட்டான் என்று தான் லைக்குவாங்களே தவிர விரும்பி லைக்கமாட்டாங்க. முக்கியமாக விடயம் யாரையாவது tag செய்ய மறந்தால் பிறகு அவங்க உங்க greetingக்கு பதில் போடாமல் விட சந்தர்ப்பமுண்டு.

    "இதில tag செய்திருக்கிற எத்தனை பேருடைய  நண்பர்களுக்கு காட்டும்? Timeline and Tagging Settings ல How can I manage tags people add and tagging suggestions? ல் Review tags people add to your own posts before the tags appear on Facebook? ல் enable என்று போட்டிருப்பாங்க.."
    போடும் வாழ்த்து படங்களை யாரும் போடாதவற்றை தேடி பிடித்து போடுங்க.

    "இதில் யாரையும் tag செய்யவேயில்ல ஆனாலும் லைக்குகளுக்கு பஞ்சமில்லை"

    இவற்றை நீங்கள் தொடர்ந்து செய்வதால் உங்களை உங்கள் நண்பர்கள் தொடர்ச்சியாக பார்வையிடுகின்றனர் என்று நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை. உங்கள் பதிவுகள் hide செய்யப்படுகிறது, அல்லது acquaintance என்ற listல் நீங்கள் சோ்க்கப்படுகிறீர்கள் அல்லது உங்கள் நண்பர் news feedல் உங்கள் பதிவுகளை முக்கியமில்லை என்று updates setting செய்திருக்கலாம். ஆனால் இவையனைத்தும் உங்களுக்கு தெரிவிக்கபடமாட்டாது. நீங்கள்  முக்கியமான பதிவுகள் படங்கள் போட்டாலும் மற்றவர்கள் அதை கவனிக்காமல் போய்விடுவார்கள்.


  6. ஒரு பதிவு போடும்போது மற்றவங்க யாரும் போடாத பதிவுகளாக தேடி போடுங்க. எல்லாரும் போட்டதையே நீங்களும் போட்டால் யாருமே லைக்க மாட்டாங்க.

  7.  facebookல் give & take policy ரொம்ப முக்கியம். நீ என் postஜ லைக்கினால் தான் நானும் லைக்குவேன் என்று இருப்பாங்க. ஆனா நீங்க அவனுடைய எல்லா postயும் லைக்கினால் உங்களுக்கு வேற வேலயே இல்லயா என்று நினைப்பாங்க. அதனால் அவசியமானதை மட்டுமே லைக்குங்க, உங்க மரியாதைய காப்பாத்துங்க.


  8.  ஏதாவது post போட்டு அதற்கு அதிகளவான லைக்குகள் வேணுமென்றால் லீவு நாள் பார்த்து உங்க நண்பர்கள் எந்த நேரம் அதிகளவில் இருப்பார்கள் என்று பார்த்து போட்டால் லைக்குகள் வர சந்தர்ப்பம் இருக்கு. எல்லாரும் கிரிக்கெட்டி போட்டியில் தாங்கள் தான் விளையாடுவது போல் மும்முரமாக TV யில் பார்த்துக்கொண்டு இருந்தால் உங்கள் post சிலவேளைகளில் கவனிக்கபடாமல் போய்விடும். யாருமே லைக்கல அதுக்காக உங்க postகளை நீங்களே லைக் போட்டு உங்க மரியாதைய குறைச்சுக்காதீங்க. உங்களுக்கு பிடிச்சதால தானே போட்டிருக்கிறீங்க. பிறகெதுக்கு லைக்கு.
முடிவு: என்ன செய்தாலும் வித்தியாசமாக செய்யனும் அதை ரசிக்கிற மாதிரியும் இருக்கனும். அப்போ லைக்குகள் தன்னால வரும்.

Tuesday, January 1, 2013

Happy New Day !

அதொன்றும் இல்ல New year என்றாலும் ஒரு நாள் கொண்டாட்டம் தானே..

என்னதான் சொன்னாலும் ஒவ்வொரு நாளும் ஏதாவது கொண்டாட்டம் வந்தால் சலிச்சு போவது உண்மைதான்.





ஆனாலும், எந்நாளும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகள்.

Monday, August 6, 2012

உதவும் கரங்கள்

நடுச்சாமம் கடந்துவிட்ட நிலையில் பேய் கூட தூங்கிடும் (ஹா ஹா என்னை சொல்லல... ) நேரமாம் நான் இன்னும்  தூங்கவில்லை அர்ச்சனை நடக்கிறது எனக்கு... அது சரி அவுங்களுக்கு தெரியுமா நான் எப்பேற்பட்ட உதவி செய்து கொண்டிருக்கிறேன் என்று.

ஒலிம்பிக்கில் தடகள விளையாட்டுக்கள் தொடங்கிச்சுதென்றா அந்த நாள், மணி, நிமிடம், செக்கன் எல்லாம் போறதே தெரியாதே... இப்படி பார்த்துக்கொண்டு இருக்கும் போதுதான் அந்த சம்பவம் கண் முன்னே நடந்தது.
இரவு நேரமாகிவிட்டதால அழையா விருந்தாளிகள் வந்திறங்கிவிட்டாங்க. அவங்களுக்கு சாப்பாடு படுக்கை எதுவும் தேவையில்லை, ஆனால் குடிக்கிறத்துக்கு  ஒரு துளி அதிலும் பாதியிலும் பாதியிலும் பாதியிலும் பாதி இரத்தம் வேணுமாம்.. நாங்க யாரு விடாகண்டனுக்கு கொடாக்கண்டனல்லோ.. விடுவமா நாங்க உயிருக்கே உல வைச்சிடுவமுல்ல. நல்லவேள கொல கேஸ் போட யாருமில்ல.

நானும் பாவம் பிழைச்சு போகட்டும் என்று விட்டா நம்மக்கிட்டயேவா.. ஒரே கும்மியடிதான்.. ஒலிம்பிக்கில் விறுவிறுப்பான போட்டிகள்  நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில கும்மியடி கும்மியடிதான்... விருந்தாளிங்க சிக்கி சின்னாபின்னமாகி கீழே கிடக்கும் போதுதான் எல்லாரும் லைன்னில வாறாங்க.. அவுங்க. ஆளாளுக்கு ஒரு பக்கமா பிச்சுகொண்டு போறாங்க, அப்போதான் நம்ம ஹீரோக்கு ஒரு கால் கிடைக்குது. யப்பா எவ்வ்வ்வளவு நீளமா இருக்கு. ஒரு மாதிரி பலன்ஸ் பண்ணி தூக்கும் போது... ஹ்ஹ்ஹ்ம்ம்ம்... திரும்ப விழுந்திட்டுதே.. இத வீட்டில கொண்டுபோய் சோ்க்கிறதுக்குள்ள பள்ளம் மேடெல்லாம் கடக்கணும். அத அப்படியே போட்டுட்டு அந்த பள்ளத்த எட்டி பார்த்தா, அட இவ்வளவுதானா அவனவன் 100மீற்றர் ஓடுறத்துக்குள்ள வீட்டில கொண்டுபோய் வைச்சுட்டு நாம ஒலிம்பிக் போட்டிகள் பார்க்க வந்திடலாம் என்று போனார் நம்ம ஹீரோ.

நாம பார்க்க இருந்தது என்னவோ ஒலிம்பிக் போட்டிகள்தான், ஆனால் அதுக்காக செய்தது வசமாய் மாட்டிக்கொண்ட நுளம்புகளை அடிச்சு எறும்புகளுக்கு தீனி போட்டதும், அவை கொண்டு போகும் விதத்தை பார்த்ததும்தான்.

ஏதோ நம்மாள முடிந்த உதவி.